வைரல் வீடியோ: போலீசாரை அறைந்த ஒய்.எஸ் ஷர்மிளா..வினாத்தாள் கசிவு போராட்டத்தில் பகீர் சம்பவம்

Published : Apr 24, 2023, 02:39 PM ISTUpdated : Apr 24, 2023, 04:57 PM IST
வைரல் வீடியோ: போலீசாரை அறைந்த ஒய்.எஸ் ஷர்மிளா..வினாத்தாள் கசிவு போராட்டத்தில் பகீர் சம்பவம்

சுருக்கம்

ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா பேப்பர் லீக் போராட்டத்தில் போலீசாரை அறைந்தார்.

தெலுங்கானா பேப்பர் லீக் வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ஒய்.எஸ்.ஷர்மிளாவை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, போராட்டத்தின் போது காவல்துறையினரை தாக்கியதால் இன்று கைது செய்யப்பட்டார். மாநில அரசு நடத்திய ஆள்சேர்ப்புத் தேர்வுகளுக்கான கேள்விகள் கசிந்ததாகக் கூறப்படும் கேள்விகளை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் ஷர்மிளாவை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து வெளியான வீடியோவில், ஒய்.எஸ்.ஷர்மிளாவின் காரை போலீசார் தடுக்க முயற்சித்தனர். வாகனம் நிறுத்தப்பட்ட உடனேயே, ஒய்.எஸ்.ஷர்மிளா போலீஸ்காரரிடம் நடந்து சென்று, அவரை அறைகிறார். அதிகாரிக்கும், ஷர்மிளாவுக்கும் இடையே கோபமான வாக்குவாதம் ஏற்பட்டதால், மற்ற போலீசார் அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். 

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி ஒருவர், ஒய்.எஸ்.ஷர்மிளா எந்த முன் அனுமதியும் பெறாமல் எஸ்ஐடி அலுவலகத்திற்குச் சென்று அங்கு போராட்டம் நடத்த இருந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தததால் அவரது வீட்டிற்குச் சென்றோம். அதிகாரிகள் அவரிடம் விளக்கம் அளிக்கவும், அவரை அங்கு செல்ல விடாமல் தடுக்கவும் அங்கு சென்றனர். அவர் காவல்துறை அதிகாரிகளை தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிகாரிகளிடம் புகார் பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். பெண் கான்ஸ்டபிளை அவர் அறைந்ததாக வந்த செய்திகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஷர்மிளா தற்போது காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்றார்.

இதனிடையே இதுக்குறித்து அறிக்கை வெளியிட்ட ஷர்மிளா, தற்காப்புக்காக செயல்படுவது எனது பொறுப்பு. காவல்துறை என்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டனர் என்று குற்றம் சாட்டினார். மேலும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சிபிஐ அல்லது பதவியில் இருக்கும் நீதிபதியால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி தெலுங்கானாவில் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறைந்தபட்சம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் வெளிவந்ததில் இருந்து அரசு காலியிடங்களை நிரப்புவதற்கான மூன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த மாதம், ஹைதராபாத்தில் இந்த பிரச்சனைக்காக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர் கைது செய்யப்பட்டார். ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளா சமீபத்தில் தெலுங்கானா முழுவதும் பேரணி நடத்தினார். ஆந்திராவில் ஆட்சியில் உள்ள தனது சகோதரரின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் தனது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..கடைசி நேரத்தில் ரத்து.. பிடிஆருக்கு நோ சொன்ன முதல்வர் - உண்மையை போட்டு உடைத்த சவுக்கு சங்கர்.!

இதையும் படிங்க..குடும்பத்தினர்களுக்கு மட்டும் டெண்டர்! இலவச லேப்டாப் குளறுபடி.! அதிமுக ஆட்சி பற்றி சிஏஜி அதிர்ச்சி தகவல்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!
Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!