ஷங்கரின் முதல்வன் பட பாணியில் பாஜக எம்.எல்.ஏ செய்த புதுமையான செயல்.. என்ன செய்தார் தெரியுமா?

By Ramya s  |  First Published Feb 12, 2024, 8:09 AM IST

தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ வெங்கட ரமண ரெட்டி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய புகார் பெட்டிகளை நிறுவினார்.


தெலங்கானாவின் காமரெட்டி சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏ காடிபள்ளி வெங்கட ரமண ரெட்டி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, தனித்துவமான புதுமையான திட்டத்தை தொடங்கி உள்ளார். ஆம்.. காமரெட்டி சட்டமன்றத் தொகுதியில் புகார் பெட்டிகள் பொருத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக காமரெட்டி மாவட்ட தலைமையகத்தில் புகார் பெட்டியை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பெட்டிகள் பொருத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.. கிராமத்திற்கு வந்து மக்களின் புகார்களை நேரடியாக தீர்த்து வைப்பதாக தெரிவித்தார். எனவே மக்கள் தங்கள் குறைகளை புகார் பெட்டி மூலம் அவரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். 

Latest Videos

undefined

நண்பன் பட விஜய் பாணியில்.. தாத்தாவை பைக்கில் மருத்துவமனைக்கு கூட்டி வந்த பேரன் - வைரல் வீடியோ !!

சமீபத்தில் சாலை விரிவாக்கத்திற்காக எம்.எல்.ஏ., சொந்த வீட்டையே இடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.. 1000 கஜத்துக்கும் அதிகமான நிலம் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், அதன் மதிப்பு ரூ.6 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காமரெட்டி நகரின் பழைய மாஸ்டர் பிளானில், மாவட்ட தலைமையகத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முதல் பஞ்சமுகி அனுமன் கோயில் வழியாக ரயில்வே கேட் வரையிலான சாலை 80 அடி சாலையாக உறுதி செய்யப்பட்டது. ஆக்கிரமிப்புகளால் 34 அடியாக குறைக்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சாலையை மறுவடிவமைப்பு செய்ய, எம்.எல்.ஏ., முடிவு செய்து, சாலை விரிவாக்கத்திற்கான திட்டத்தை வகுத்தார்.

இதன் ஒரு பகுதியாக, அப்பகுதி மக்கள், நகராட்சி மற்றும் சாலை மற்றும் கட்டடத் துறை அதிகாரிகள் முன்னிலையில், காமாரெட்டியில் அவரின் கட்டிய சொந்த வீடு இடிக்கப்பட்டது. மாவட்டத் தலைமையகத்தில் தற்போது சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்படாமல் இருந்தாலும், தொகுதி மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் இடிக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ வெங்கடரமண ரெட்டி தெரிவித்தார்.

தாயிடம் பிச்சை கேட்டு வந்த சன்னியாசி ஒரு பிராடு! வசமாக சிக்கிய பணம் பறிக்கும் கும்பல்!

மக்கள் தாமாக முன்வந்து சாலைகளை விரிவாக்கம் செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஏழைகளின் வீடுகள் இடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் இதே போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். தற்போது அதே போல், தற்போது கடிபள்ளி தொகுதி முழுவதும் புகார் பெட்டிகளையும் அமைத்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

click me!