தெலுங்கானா முதல்வர் பதவிக்கான ரேசில் முந்தும் ரேவந்த் ரெட்டி! முரண்டு பிடிக்கும் மூத்த தலைவர்கள்!

By SG Balan  |  First Published Dec 5, 2023, 2:39 PM IST

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் இடையேயான சந்திப்புக்குப் பிறகு இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.


நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றிக்கு வழிவகுத்த பெருமைக்குரியவர் மாநில காங்கிரஸ் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி. காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து இவரைத்தான் முதல்வராக்க தேர்வு செய்திருப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான காங்கிரஸ் மத்திய தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கானாவில் காங்கிரஸ் பிரச்சாரத்தை மேற்பார்வையிட்ட கார்கே மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் இடையேயான சந்திப்புக்குப் பிறகு இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Tap to resize

Latest Videos

undefined

யார் இந்த சுனில் கனுகோலு? தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்ட மாஸ்டர் பிளான் என்ன?

54 வயதான ரேவந்த் ரெட்டி காங்கிரஸின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர். ஆனால், கட்சித் தலைவர் பதவிக்கு அவரை நியமித்தபோதே கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார். இப்போதும் தெலுங்கானாவில் உள்ள கட்சியின் மூத்த தலைவர்கள் ரேவ்ந்த் ரெட்டிக்கு முதல்வர் பதவி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், திங்கட்கிழமை மதியம் நடைபெறவிருந்த பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டது. முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, பட்டி விக்ரமார்கா, கோமாட்டிரெட்டி வெங்கட் ரெட்டி, தாமோதர் ராஜநரசிம்மா எனப் பலர் ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் பதவி கொடுப்பதை எதிர்க்கின்றனர்.

ரேவந்த் ரெட்டி மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அவரது சொந்த மக்களவைத் தொகுதியிலேயே காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மோசமாக இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டி ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் பதவி கொடுக்கக் கூடாது என்று கூறுகின்றர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிசோரம் ஆட்சியைப் பிடிக்கும் சோரம் மக்கள் இயக்கம்! 6 கட்சிகள் கூட்டணியின் சக்சஸ் ஃபார்முலா!

click me!