ஜெ. நலம்பெற வேண்டி வட இந்தியாவிலும் தொடரும் பிரார்த்தனைகள் : உத்தரகாண்ட் எம்.பி. தருண் விஜய் சிறப்பு வழிபாடு

Asianet News Tamil  
Published : Oct 12, 2016, 12:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
ஜெ. நலம்பெற வேண்டி வட இந்தியாவிலும் தொடரும் பிரார்த்தனைகள் : உத்தரகாண்ட் எம்.பி. தருண் விஜய் சிறப்பு வழிபாடு

சுருக்கம்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய், முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய வேண்டி, ஹரித்துவாரில் உள்ள கங்கா கோயில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 19 நாட்கள் ஆன நிலையில் அவர் பூரண குணமடைய வேண்டி, அதிமுக தொண்டர்கள், பிரமுகர்கள், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர், நேர்த்திக்கடன்கள் செலுத்தியும், பால் குடம் ஏந்தியும் வழிபாடு நடத்தி வருகின்றனர். பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், நேற்று காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில், முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய வேண்டி, சிறப்பு வழிபாடு நடத்தினார்.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய், ஹரித்துவார் கங்கா கோயில் மற்றும் கேதர்நாத் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.

இது குறித்து, தருண் விஜய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவள்ளுவரின் புகழ் நாடு முழுவதும் பரவுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவி பேருதவியாக இருந்தது என்றும்ம், அவரது உதவி மூலம் எங்களுக்க அங்கீகாரம் கிடைத்தது என்றும் கூறியுள்ளார்.

தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்றும், இதற்காக ஹரித்துவார் கங்கா கோயில் மற்றும் கேதர்நாத் கேதாரீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

காங்கிரசில் 7 கோடிக்கு சீட் விற்பனை? ராகுல், பிரியங்கா மீது பாஜக பகீர் குற்றச்சாட்டு!
இந்தியாவில் காமெனி பெயர் கொண்ட சாலை எங்கே இருக்கு தெரியுமா? வரலாறு முக்கியம் அமைச்சரே