உலகச் சண்டியரின் உருட்டு மிரட்டு... சைலண்டாக ட்ரம்பை ‘கைப்புள்ள’யாக்கும் இந்தியா.. ரஷ்யா- சீனாவுடன் நண்பேண்டா..!

Published : Aug 26, 2025, 03:57 PM IST
donald Trump and putin

சுருக்கம்

இந்தியாவின் மீதான வரி வரம்பை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இதற்காக அவர் தனது முதுகை தட்டிக் கொள்கிறார். நோபல் பரிசு பெற வேண்டும் என்கிற நப்பாசையில் போரை நிறுத்தியதாக அவர் மீண்டும் மீண்டும் சுயபுகழ்ச்சி தேடி வருகிறார்.

டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு மீதான அடாவடித்தனம் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை சீர்குலைத்துள்ளது. தற்பெருமை பீற்றிக் கொள்ளும் டிரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். அத்தோடு அமெரிக்க அதிபரான ட்ரம்ப், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு தானே காரணம் என பலமுறை தம்பட்டம் அடித்துக்கொண்டு வருகிறார். நேற்றும்கூட, டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையிலான போரை நிறுத்தியதாக மீண்டும் கூறியுள்ளார்.

வரி விதிப்பு விஷயத்தில் இந்தியா தனக்கு தலைவணங்கி, போர் நிறுத்தம் தன்னால்தான் ஏற்பட்டது. தான் சொல்வதைத்தான் இந்தியாவும் சொல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் இந்தியாவும் அதற்கு சளைக்கவில்லை. அமெரிக்காவிற்கு எதிராக உறுதியாக நிற்கிறது. டிரம்ப் சொன்ன இரண்டு விஷயங்களையும் இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் டிரம்ப் எரிச்சலடைந்து வருகிறார். இந்த சம்பவங்களில், டிரம்ப் எவ்வளவு பெருமை பேசுகிறார்? பிரதமர் மோடி எவ்வளவு முதிர்ச்சியடைந்தவராக நடந்து வருகிறார் என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகிறது.

டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தியாவிடம் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டு வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம்வரை அவர் நன்றாகத்தான் இருந்தார். பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, ​​அவர் தன் நெருங்கிய நண்பர் என நெகிழ்ந்தார். வங்கதேசத்தின் எதிர்காலத்தை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் மாதங்கள் செல்லச் செல்ல ட்ரம்புக்கு புளித்துப்போனது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. இதற்கு டிரம்ப் மட்டுமே முழுப் பொறுப்பு. அவரது காழ்ப்புணர்ச்சியால் வந்த வெறுப்பு.

அமெரிக்க அதிபர் தொடர்ந்து அறிக்கைகளாக வெளியிட்டுத் தள்ளுகிறார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியாவின் மீதான வரி வரம்பை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இதற்காக அவர் தனது முதுகை தட்டிக் கொள்கிறார். நோபல் பரிசு பெற வேண்டும் என்கிற நப்பாசையில் போரை நிறுத்தியதாக அவர் மீண்டும் மீண்டும் சுயபுகழ்ச்சி தேடி வருகிறார். போக்கிடமற்ற பாகிஸ்தான் அவருக்கு பெருமை சேர்த்தது. ஆனால், எதற்கும் மசியாத இந்தியா அவரது கருத்தை ஏற்கத் தயாராக இல்லை.

இதையெல்லாம் செய்வதன் மூலம், டிரம்ப் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை சிதைத்து வருகிறார். அதே நேரத்தில், சேதத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கும் பல தலைவர்கள் அமெரிக்காவிலும் உள்ளனர். சமீபத்தில், டிரம்ப் இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்தபோது, ​​அமெரிக்க அமைச்சர் மார்க் ரூபியோ தனது எக்ஸ் தளத்தில் ‘‘அமெரிக்காவிற்கு இந்தியா என்றால் என்ன என்பதை விளக்கினார்.

இந்தியாவுக்கான எங்கள் அடுத்த தூதராக செர்ஜியோ கோரை பரிந்துரைக்கும் டிரம்பின் முடிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உலகின் நமது நாட்டின் மிக முக்கியமான உறவுகளில் ஒன்றான இந்தியா, அமெரிக்காவின் சிறந்த பிரதிநிதியாக அவர் இருப்பார்’’ எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக இருந்த நிக்கி ஹேலி, டிரம்பை எச்சரித்திருந்தார். இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் ஒரு நுட்பமான கட்டத்தில் நிற்கின்றன என்று அவர் கூறியிருந்தார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதும், வரி விதிப்பு தகராறும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் நிரந்தர விரிசலை ஏற்படுத்த அனுமதிக்கக்கூடாது’’ என்று அவர் எச்சரித்து இருந்தார்.

டொனால்ட் டிரம்புக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். சரியான நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சீனா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும். டிரம்ப் முரட்டுத்தனமாக பேசுபவராக இருந்தாலும், மோடி இந்த சூழ்நிலை முழுவதையும் நிதானமாக கையாண்டுள்ளார். வரிகள் குறித்து அமெரிக்காவிற்கு பல முறை பதிலளித்துள்ளார். அதேவேளை எப்போதும் இந்தியாவின் நலன் பற்றிப் பேசினார். பிரதமர் மோடி நிதானமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவர் எந்த முடிவை எடுத்தாலும், அதை தேசிய நலனுக்காக எடுப்பேன் என்று அமெரிக்காவுக்கும், டிரம்புக்கு எடுத்துரைத்தார்.

பிரதமர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, தனது அரசு அமெரிக்காவிற்கு எந்தவகையிலும் தலைவணங்கவில்லை என்பதை ஆணித்தனமாக சொல்லிக் கொண்டிருக்கும் அதே வேளை, அவரது அரசு அதிகாரங்கள் அமெரிக்காவிற்கு நேரடியான பதிலை அழுத்தமாக கூறின. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முதல் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரை அனைவரும் அவ்வப்போது டிரம்பிற்கு நேரடியான பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தியா யாருக்கும் தலைவணங்காது என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார். அதே நேரத்தில் ஜெய்சங்கர் வரிவிதிப்பு குறித்து நேரடியாகக்கூறி, ‘‘அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை என்றால், அதை அவர்கள் வாங்க வேண்டாம்’’ என்றார்.

இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை முடிவு செய்யாது என்று அமெரிக்காவிடம் கூறியது. ரஷ்யா , சீனாவுடனான உறவுகளை எப்படி பராமரிப்பது என்பது டிரம்பின் கைகளில் இல்லை. அமெரிக்காவுடனான உறவுகள் மோசமடைந்ததில் இருந்து, சீனாவுடனான இந்தியாவின் நட்பு வளர்ந்துள்ளது. ரஷ்யாவுடனான நட்பு வலுவடைந்துள்ளது. இருநாட்டின் அமைச்சர்கள் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு வருகை தருகிறார்கள்.ஆனால் அமெரிக்காவுக்கு செல்லவே இல்லை. பிரதமர் மோடி தானே சீனாவிற்குச் செல்லப் போகிறார். புடின் இந்தியாவிற்கு வரப்போகிறார். இவை எல்லாமே டிரம்புக்கு, அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் சமிக்ஞை. இது அமெரிக்காவை சார்ந்திருக்கப் போவதில்லை என்பதை இந்தியா தெரியப்படுத்தியுள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!