வெளியானது சுகாதாரத்துறைக்கான தரவரிசை பட்டியல்... 2வது இடத்தை பிடித்தது தமிழ்நாடு!!

By Narendran SFirst Published Dec 27, 2021, 3:06 PM IST
Highlights

மத்திய அரசு வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்துள்ளது. 

மத்திய அரசு வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான தரவரிசை பட்டியலில் தமிழம் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறையின் நிலை குறித்து நிதி ஆயோக் கணக்கிட்டு தரவரிசை ஒன்றை வெளியிட்டு வருகிறது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை 23 காரணிகளை கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்தத் தரவரிசையை நிதி ஆயோக், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டுகிறது. இந்தத் தரவரிசையில் நாட்டிலுள்ள மாநிலங்களை பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்  சுகாதாரத்துறையின் நிலை குறித்து ஆய்வு செய்து தரவரிசை பட்டியல் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நிதி ஆயோக், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்த தரவரிசை பட்டியலில், 23 காரணிகளைக் கொண்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார நிலை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்கள் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன இந்த சுகாதாரத்துறை தர வரிசை பட்டியலில் கேரளா முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. தெலங்கானா 3வது  இடத்தையும், ஆந்திர பிரதேசம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உத்தரப்பிரதேசமும், அதற்கு முன்னதாக பீஹார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதேபோல் சிறிய மாநிலங்கள் பட்டியலி மிசோரமும், யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் சண்டிகரும் முதலிடத்தில் உள்ளன. தலைநகர் டெல்லியும், ஜம்மு-காஷ்மீரும் இந்தப் பட்டியலில் கடைசி இடங்களை பிடித்துள்ளன.  பட்டியலில் உள்ள 19 பெரிய மாநிலங்களில் முதல் 4 இடங்களை தென் மாநிலங்களே பிடித்துள்ளன. 

click me!