
தமிழகத்தைச் சேர்ந்த சிறப்பு பிரிவு படையைச் சேர்ந்த போலீசார் ஒருவர், ஆந்திர மாநிலத்தில், மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், விசாகா மாவட்டதில் உள்ள டோல்கேட் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர் நீலமேக அமரன். இவர் மதுரையைச் சேர்ந்தவர். கஞ்சா கும்பலை படிப்பதற்காக நீலமேகம், ஆந்திரா வந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாகா மாவட்டத்தில் உள்ள டோல்கேட் ஒன்றில், 9 பேர் கொண்ட கும்பலை பிடிக்கச் சென்றபோது, அந்த கும்பல், நீலமேகத்தை கத்தியால் குத்திவிட்டு சென்றுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே நீலமேக அமரன் உயிரிழந்துள்ளார். நீலமேக அமரன் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.