எங்க பகுதியில் நாங்க அணைக்கட்டுறோம்! தேவையில்லாமல் தமிழகம் தொல்லை தருகிறது! கடுகடுக்கும் முதல்வர் சித்தராமையா

By vinoth kumar  |  First Published Sep 12, 2023, 11:18 AM IST

பாஜக கூறுவது போல காவிரி நீரை தமிழகத்துக்கு மகிழ்ச்சியாக திறந்துவிடவில்லை, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டோம். 


காவிரி விவகாரத்தில் பாஜகவினர் இரட்டை வேடம் போட்டு, அரசியல் ஆதாயம் தேடுவதாக, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடகா மாநில அரசுகளுக்கு இடையேயான மோதல் போக்கு தொடர் கதையாக இருந்து வருகிறது. தமிழகம் தண்ணீர் திறந்துவிடும் படி கோரிக்கை வைப்பதும், கர்நாடகா அடாவடி தனம் செய்து மறுப்பு தெரிவிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

Tap to resize

Latest Videos

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா;- மேகதாது விவகாரத்தில் தேவையற்ற தொல்லைகளை தமிழகம் தருகிறது. மேகதாது திட்டத்தை எதிர்ப்பதற்கு தமிழகத்திற்கு எவ்வித காரணமும் இல்லை. எங்கள் பகுதியில் நாங்கள் அணை காட்டுகிறோம்.  ஆனால்,  கர்நாடகா விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தும் மத்திய பாஜக அரசு தாமதம் செய்கிறது. 

இதையும் படிங்க;- குடிநீர் தேவைக்குத் தான் முன்னுரிமை: கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திட்டவட்டம்

காவிரி தொடர்பாக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் அரசியல் செய்ய மாட்டோம் என்றும் கூறிய பாஜக, வெளியில் வந்து அணையில் இருந்து தமிழகத்திற்கு அதிக தண்ணீர் திறந்து விட்டதாக குற்றம் சாட்டி அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம்சாட்டினார். பாஜக கூறுவது போல காவிரி நீரை தமிழகத்துக்கு மகிழ்ச்சியாக திறந்துவிடவில்லை, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டோம். 

இதையும் படிங்க;-  கர்நாடக செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம்! இப்படி அமைதியா இருந்தா வேலைக்கு ஆகாது முதல்வரே! ராமதாஸ்.!

மாநில விவசாயிகளின் நலன் மற்றும் குடிநீர் தேவைகளை பாதுகாக்கும் கடமை மாநில அரசுக்கு உள்ளது. திமுக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. செப்டம்பர் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் இன்று வரை தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும் என சித்தராமையா கூறியுள்ளார். 
 

click me!