கர்நாடக அரசு அளித்த வாக்குறுதி.. பெங்களூரு பந்த் வாபஸ்.. தனியார் போக்குவரத்து சங்கம் அறிவிப்பு!

By Ansgar R  |  First Published Sep 11, 2023, 6:22 PM IST

தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை அளிக்கப்பட்டுள்ளது போலவே, கர்நாடக அரசும் சக்தி என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வண்ணம் சட்டத்தை இயற்றியுள்ளது.


இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் உள்ள தனியார் பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் கர்நாடக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததையடுத்து, தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு பெங்களூரு பந்தை வாபஸ் பெற்றுள்ளது. 

ஐடி தலைநகரான பெங்களூரு முழுவதும் டாக்சிகள் மற்றும் பிற தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதை நிறுத்தியதால், இன்று காலை முதல், தனியார் போக்குவரத்து அமைப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

சிறையில் 3 மணிநேரம் மட்டுமே தூங்கிய சந்திரபாபு நாயுடு! என்னென்ன செய்தார் தெரியுமா?

தனியார் போக்குவரத்து சங்கங்களின் கோரிக்கைகள் என்ன?

பெங்களுருவில் பெண்களுக்கான இலவச போக்குவரத்து திட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் கூட அரசின் சக்தி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதே தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. ஆனால் சக்தி திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கு நீட்டிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்று அரசு ஏற்கனவே கூறியுள்ளது.

மேலும் கர்நாடகாவில் தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஆட்டோ தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அவர்களின் பைக் டாக்ஸி தடை கோரிக்கை குறித்து சட்டப்பூர்வ கருத்தை கேட்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியது. ஓட்டுநர் நல வாரியம், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காப்பீடு, வணிக சரக்கு வாகனங்களுக்கு வாழ்நாள் வரி உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 30 கோரிக்கைகளை போக்குவரத்து துறையிடம் தொழிற்சங்கங்கள் முன்வைத்தன.

முன்னதாக, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜூலை 24 அன்று மாநில போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டியுடன் கலந்துரையாடல்களை நடத்தியது, அதாவது அவர்கள் முதலில் ஜூலை 27 ஆம் தேதி போராட்டம் நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அந்த சந்திப்பு நடந்தது.

இருப்பினும், முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பிரச்னைகள் குறித்து அவருடன் விவாதிப்பதாக ரெட்டி அப்போது கூறியிருந்தார். அரசு தரப்பில் பதில் வராததால், அந்த சங்கங்கள் இன்று செப்டம்பர் 11ம் தேதி, ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தன. இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, அமைச்சர் ராமலிங்க ரெட்டி உறுதியளித்ததையடுத்து, இன்று திங்கள்கிழமை மதியம் பந்த் வாபஸ் பெறப்பட்டது.

பிரியாணிக்கு ரைத்தா கேட்டது ஒரு குத்தமா? பிரபல ஹோட்டலில் தகராறு.. ஊழியர்கள் தாக்கி ஒருவர் பலி - என்ன நடந்தது?

click me!