
மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தா, மும்பையில் உள்ள காமாத்திபுரா உள்ளிட்ட பிரபலமான சிவப்பு விளக்குப்பகுதி கூட டிஜிட்டல்பரிமாற்றத்துக்கு மாறி, வாடிக்கையாளர்களிடம் பேடிஎம், வங்கிபரிமாற்றம் மூலம் பணம் பெற்று வருகின்றனர்.
ரூபாய் தடை
நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பிரதமர் மோடி செல்லாது என கடந்த நவம்பர் 8 -ந்தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து மக்கள் வங்கிகள்,ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
டிஜிட்டல் பரிமாற்றம்
அதே சமயம், மத்திய அரசு மக்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற ஊக்கப்படுத்தி, சலுகைகள் பல அளிக்கத் தொடங்கியது. கிரெடிட்,டெபிட் கார்டுகள் மூலம் பரிமாற்றம் செய்வது, வங்கிப் பரிமாற்றம், இ-வாலட் மூலம் பணம் செலுத்துதல் ஆகியவற்றை மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியது.
பாலியல் தொழில்
பணத்தட்டுப்பாட்டால் ஏராளமான தொழில்கள் முடங்கிய நிலையில், கொல்கத்தா, மும்பை நகரங்களில் பிரபலமாக இருக்கும் பாலியல் தொழிலும் தப்பவில்லை. சில்லரை தட்டுப்பாடு, பணத்தட்டுப்பாடு காரணமாக, வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால், அங்கு இருக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
மாற்றம்
இந்நிலையில், வேறு வழியின்றி இப்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களும் பேடிஎம், மொபைல் பேங்கிங், ஸ்வைப்பிங்மெஷின் மூலம் தங்களின் சேவையை தொடங்கிவிட்டனர்.
மொபைல் பேங்கிங்
இது குறித்து கொல்கத்தா சோனாகாச்சியில் பாலியல் தொழில் செய்யும் பீகாரைச் சேர்ந்த மன்ட்டு எனும் பெண் கூறுகையில், “ என்னுடைய பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஒருநாள் இரவு முழுவதும் என்னை ‘புக்’ செய்வார்கள். அவர்களிடம் ரூ.6 ஆயிரம் கட்டணமாக வசூலிப்பேன். இப்போது பணத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதால், மொபைல் பேங்கிங் மூலம், பணத்தை என்னுடைய வங்கிக்கணக்கு மாற்றக்கூறி விடுகிறேன்.
ஸ்வைப்பிங் மெஷின்
ஏனென்றால், இந்த தொழிலில் கடன் கூறமுடியாது. ஏ.டி.எம்.களிலும் நாள் ஒன்றுக்கு ரூ. 2500 மட்டுமே எடுக்க முடியும் என்பதால், சிலர் பாதியை பணமாகவும் மீதித் தொகையை ஆன்-லைனிலும் பரிமாற்றம் செய்து விடுகிறார்கள். சில பெண்கள் தங்கள் வீடுகளில் ‘ஸ்வைப்பிங்மெஷின்’ வைத்து இருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி விடுகிறார்கள்'' என்றார்.
வேறு வழியில்லை
ஆக்ராவைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி வர்ஷா கூறுகையில், “ மோடியின் ரூபாய் நோட்டு தடை எங்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துவிட்டது. கண்டுபிடிப்பு என்பது அவசியம் என்பதால், இப்போது வேறு வழியில்லாமல், வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை டிஜிட்டல் பரிமாற்றம் மூலம் பெற்று தொழில் செய்கிறோம். எங்களின் முதலாளி கணக்குக்கு பணத்தை மாற்றக் கோரி அவருக்கு பணம் கிடைத்தபின், நாங்கள் தொழிலில் ஈடுபட்டு கமிஷன் பெறுவோம்'' எனத் தெரிவித்தார்.