ரூ.1 லட்சத்துக்கு காண்டம், ரூ.4 லட்சத்துக்கு நூடுல்ஸ்.. 2025ல் இந்தியர்கள் செய்த வினோத ஆர்டர்கள்!

Published : Dec 24, 2025, 03:28 PM IST
Swiggy

சுருக்கம்

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் “How India Instamarted 2025” அறிக்கை, இந்தியர்களின் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்தியாவில் உணவு மற்றும் மளிகை டெலிவரி சேவைகள், இன்று அவசர தேவையைத் தாண்டி அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. இதை தெளிவாக காட்டுவது Swiggy Instamart வெளியிட்டுள்ள “How India Instamarted 2025” என்ற ஆண்டு அறிக்கை. 

இந்த அறிக்கை, கடந்த ஓராண்டில் கோடிக்கணக்கான ஆர்டர்களை ஆய்வு செய்து, இந்தியர்களின் உணவுப் பழக்கம், செலவின நடைமுறை மற்றும் வாழ்க்கை முறை எவ்வாறு மாறியுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. 2025-ல், ஒரு வினாடிக்கு 4-க்கும் அதிகமான பால் பாக்கெட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. பனீர், சீஸ்-ஐ விட 50% அதிகமாக விற்பனையாகி, இந்திய சமையலறைகளில் அதன் முக்கியத்துவத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

ஸ்நாக்ஸ் & சமையல் பொருட்கள்

- இரவு நேர ஸ்நாக்ஸில் மசாலா சிப்ஸ் முன்னணியில்

- நாட்டின் 10 பெரிய நகரங்களில் 9 நகரங்களில் மசாலா சிப்ஸ்தான் டாப்

- கருவேப்பிலை, தயிர், முட்டை, பால், வாழைப்பழம் அதிகம் மீண்டும் ஆர்டர் செய்யப்பட்டவை

- கொச்சியில் ஒருவர் மட்டும் 368 முறை கருவேப்பிலை ஆர்டர் செய்துள்ளார்

ஆச்சரியப்பட வைக்கும் தனிநபர் செலவுகள்

- பெங்களூருவில் ஒருவர் நூடுல்ஸுக்கு மட்டும் ரூ.4.36 லட்சம்

- மும்பையில் ஒருவர் Red Bull Sugar Free-க்கு ரூ.16.3 லட்சம்

- சென்னை பயனர் செல்லப்பிராணி பொருட்களுக்கு ரூ.2.41 லட்சம்

- ஒரு ஆர்டரில் ரூ.1.7 லட்சம் iPhone + ரூ.178 லைம் சோடா

- நொய்டாவில் ஒருவர் 1,343 புரோட்டீன் பொருட்களுக்கு ரூ.2.8 லட்சம்

- சென்னையில் ஒரே கணக்கில் 228 முறை காண்டம் ஆர்டர்; மொத்தம் ரூ.1 லட்சம்

புரோட்டீன் & உலக சுவைகள்

2025-ல் புரோட்டீன் பொருட்கள் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. டாப் 10 புரோட்டீன் பொருட்களில் 7 புரோட்டீன் பார்களே. மேலும், கொரிய உணவுகளும் இந்தியர்களை கவர்ந்துள்ளன. பெங்களூருவில் gochujang சாஸ் ஆர்டர் 491% உயர்ந்துள்ளது.

2025-ன் மிகப்பெரிய செலவாளர்

2025-ல் அதிகம் செலவிட்ட ஒருவர் ரூ.22 லட்சத்துக்கு மேல் ஆர்டர் செய்து, iPhone 17, தங்க நாணயங்கள் முதல் பால், முட்டை, பழங்கள் வரை அனைத்தையும் வாங்கியுள்ளார். இன்ஸ்டாமார்ட் இன்று அவசர தேவையும் ஆடம்பரமும் இரண்டையும் பூர்த்தி செய்கிறது என்பதற்கான சிறந்த உதாரணம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அடுத்த தலைமுறை ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம்!
ரூ.30 கோடி மதிப்புள்ள தங்கம்-வைரம் ஜொலிக்கும் ராமர் சிலை… அடையாளம் தெரியாத பக்தர் செய்த தானம்!