இந்திய மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் - போலந்திடம் அறிக்கை கேட்கிறார் சுஷ்மா

 
Published : Apr 01, 2017, 11:42 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
இந்திய மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் - போலந்திடம் அறிக்கை கேட்கிறார் சுஷ்மா

சுருக்கம்

sushma swaraj demanding explanation from poland

போலந்து நாட்டின் Poznan நகரில் இந்திய மாணவர் மீது மரண தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

போலந்து நாட்டின் Poznan நகரில் இந்திய மாணவர் ஒருவர் மீது கடந்த புதன்கிழமை அன்று மரண தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

மாணவரின் பெயர் உள்ளிட்ட தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலந்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், போலந்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, அவர் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 
முன்னதாக அமெரிக்காவில் நிறவெறி காரணமாக, இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குசிபோட்லா என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
ரயிலில் லக்கேஜ் கொண்டு போக 1.5 மடங்கு கூடுதல் கட்டணம்! ரயில்வே அமைச்சர் அறிவிப்பு