காதல் திருமணம் செய்தவர்கள் இடையேதான் அதிக விவாகரத்தும் செய்யப்படுகிறது: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து!!

By Dhanalakshmi G  |  First Published May 17, 2023, 12:41 PM IST

காதல் திருமணங்கள் செய்து கொள்பவர்கள் இடையேதான் அதிகளவில் விவாகரத்து செய்யப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்துள்ளது.


உச்சநீதிமன்றத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள்  பி. ஆர். காவை, சஞ்சய் கரோல் விசாரித்தனர். அப்போது, காதல் திருமணத்தில் எழுந்த விவகாரம் என்பது தெரிய வந்தவுடன், ''காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் இருந்துதான் விவாகரத்தும் அதிகரிக்கிறது'' என்று நீதிபதி காவை தெரிவித்தார்.

காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு இடையே சமரசம் செய்ய நீதிமன்றம் முயற்சித்தது. ஆனால், கணவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, சமீபத்தில் நீதிமன்றம் உடனடி விவாகரத்து வழங்கலாம், ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்ற தீர்ப்பின் அடிப்படையில் தம்பதிகளுக்கு கணவரின் சம்மதத்தின் பேரில் விவகாரத்து வழங்கப்பட்டது.



Bench hearing transfer petition arising out of matrimonial dispute

Advocate: They had a love marriage.

Justice Gavai: Most divorces are arising from love marriages only.

Bench subsequently called for mediation. pic.twitter.com/V16eqaEnN9

— Bar & Bench - Live Threads (@lawbarandbench)

Tap to resize

Latest Videos

click me!