ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில் மேற்கு வங்க அரசு பெரும் சிக்கலில் தவித்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.
Supreme Court Rejects CBI Probe in SSC Scam: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கு கடந்த 2016ம் ஆண்டில் 25,000 ஆசிரியர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. பின்பு ஆசிரியர்கள் நியமனத்தில் பெரும் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு பலருக்கும் வேலை வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
ஆசிரியர்கள் நியமன ஊழல்
இது தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், மேற்கு வங்கத்தின் கல்வி அமைசச்ர் பார்த்தா சட்டர்ஜி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது என்பதை உறுதி செய்து கொல்கத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது.
24,000 ஆசிரியர்கள் நியமனம் ரத்து
24,000 ஆசிரியர்கள் நியமனம் ரத்தை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அடுத்த 3 மாதத்திற்குள் புதிதாகத் தேர்வு நடத்தி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டனர். இதனால் மம்தா பானர்ஜி பெரும் சிக்கலில் மாட்டிய நிலையில், அவருக்கு நிம்மதி அளிக்கும்விதமாக உச்சநீதிமன்றம் ஒன்று ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த ரயிலில் பயணித்தால் 3 வேளையும் சுடச்சுட உணவு இலவசம்! ஒரு பைசா கூட கொடுக்க வேண்டாம்!
சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
அதாவது மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழலில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கியதில் அமைச்சரவைக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. இது தொடர்பாக உச்சநிதிமன்றம் கூறுகையில், 'அமைச்சர்கள் குழுவால் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஆளுநரின் ஒப்புதல் முத்திரை பதிக்கப்பட்ட முடிவுகள் மீது எந்த நீதிமன்றமும் விசாரணை நடத்த முடியாது என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் பணியிடங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் ரத்து செய்கிறோம்'' என்று கூறியுள்ளது.
நியாயமானதாக இல்லை
மேலும் ''கூடுதல் பணியிடங்கள் உருவாக்குவது குறித்து சிபிஐ விசாரணை நடத்தலாமா என்பது குறித்து ஏப்ரல் 3-ம் தேதி குறிப்பிட்டிருந்தோம். 2022-ல் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு மற்றும் 19.5.22 அன்று வெளியிடப்பட்ட உத்தரவு குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. எஸ்எஸ்சி மூலம் சட்டவிரோத நியமனங்கள் செய்யப்பட்டதாக 5.5.22 தேதியிட்ட அமைச்சரவை குறிப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் பணியிடங்கள் உருவாக்குவது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உயர் நீதிமன்றம் நியாயமானதாக இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அமைச்சரவையின் முடிவுகளில் தலையிடுவதில்லை
முறையீட்டு நடைமுறையின் குறிப்பிட்ட முறை பின்பற்றப்படவில்லை. அமைச்சரவையின் முடிவுகளில் பொதுவாக நாங்கள் தலையிடுவதில்லை என்று சி.ஜே.ஐ சஞ்சீவ் கண்ணா கூறினார். அமைச்சரவை ஏதேனும் தகுதி பார்த்து முடிவு எடுத்திருந்தால், அதில் அதிகம் தலையிட நாங்கள் தயாராக இல்லை. ஏனெனில் அமைச்சரவை முடிவு எடுத்து, அதன் பிறகு ஆளுநர் தனது ஒப்புதல் முத்திரையை அளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
UP-க்கு 24x7 மின்சாரம்? யோகி அரசின் மாஸ்டர் பிளான்!