
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படும் விபத்துகளில் தான் அதிக அளவில் மனித உயிர் பலி ஏற்படுகிறது. மொத்த விபத்தில் 26.4 சதவீதம் விபத்துகள் மோட்டார் சைக்கிள்களினால் நாடு முழுவதும் நடக்கிறது.
லாரிகளால் 20.1 சதவீத விபத்துகளும், கார்களினால் 12.1 சதவீத விபத்துகளும், பஸ்களினால் 8.8 சதவீத விபத்துகளும், எஸ்.யு.வி. வகை வாகனங்கள் மூலம் 3 சதவீத விபத்துகளும், ஜீப்களால் 4.5 சதவீத விபத்துகள், ஆட்டோ போன்ற 3 சக்கர வாகனங்களினால் 5.1 சதவீத விபத்துகளும் நடக்கிறது. 47.9 சதவீத விபத்துகள் அதிக வேகமாக வாகனங்களை ஓட்டுவதால் நடக்கிறது.
அஜாக்கிரதையாகவும், அபாயகரமாகவும் வேகமாகவும் வாகனங்களின் செல்வதாலும், பிற வாகனங்களை முந்திச் செல்வதாலும், ஒரு 2 லட்சத்திற்கும் அதிகமான விபத்து சர்வசாதரணமாக நடக்கிறது.
இதனால் இறப்பு மற்றும் படுகாயம் அடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. வாகனங்கள் வேகமாக ஓட்டுவதால் தான் அதிக அளவில் சாலை விபத்துகளும்,கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றினால் தான் 51.1 சதவீதம் விபத்துகள் நடக்கிறது.எனவே பொதுமக்கள் ஓட்டும் கார், ஜீப், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும்.
வாகனங்களில் அதிக வேகத்திறன் கொண்ட என்ஜின்கள் பொருத்தப்படுவதால் அவை மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்ஜின்கள் அதிகம் உள்ளது.
மக்கள் பயன்படுத்தும் கார், ஜீப், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பதையும், மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்துள்ளதா? இந்த வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் ஏன் பொருத்தக்கூடாது ? என்பதை மத்திய, மாநில அரசுகள் பதில் மனுவாக தாக்கல் செய்து விளக்கம் அளிக்கவேண்டுமென உச்ச நிதிமன்றம் உத்தரவிட்டது.
வாகனங்களில் வேகத்தை கட்டுபடுத்தும் கருவி (Speed Governors) பொருத்துவதை குறித்து தொடுக்கப்பட்ட மனுவிற்கு பதிலளிக்காததால் தமிழ்நாடு உட்பட பத்து மாநிலங்களின் போக்குவரத்து செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அசாம், நாகாலாந்து, சிக்கிம், தமிழ்நாடு, டெல்லி, திரிபுரா, பீகார், ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய பத்து மாநிலங்களும் இன்னும் நான்கு வாரத்தில் பதிலளிக்க அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.