ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது ஏன்? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி…

 
Published : Apr 21, 2017, 12:24 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
ஆதார்  எண்ணை  கட்டாயமாக்கியது ஏன்?  மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி…

சுருக்கம்

supreme court about adar

ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்ட பிறகும் அதனை மீறி கட்டாயமாக்கியது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கப்படுவதற்கு பொது மக்கள் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.  இதனை விசாரித்த உச்சநீதிமன்றம்  ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

ஆனால்  உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பொது நல வழக்கு  தொடரப்பட்டது

ஆதார் எண் விவகாரம் தொடர்பான இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  அரசின் திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் அதனை மீறி கட்டாயமாக்கியது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு மத்திய அரசின் தரப்பில், அரசின் திட்டங்களுக்கு பான் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டு முறைகோடுகள் நடைபெறுவதால் அதனை தடுக்கும் விதமாகவே ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!