இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் அம்பேத்கரை விட அதிக பங்காற்றியவர் நேரு - புயலை கிளப்பிய காங்கிரஸ்

By Ganesh A  |  First Published Jan 28, 2024, 11:44 AM IST

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் அதிக பங்காற்றியவர் அம்பேத்கர் இல்லை நேரு என்கிற சர்ச்சைக்குரிய கருத்தை காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.


இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தையாக அம்பேத்கர் கருதப்படுகிறார். இந்த நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் அம்பேத்கரை விட பெரும்பங்காற்றியது நேரு தான் எனக்கூறி புது புயலைக் கிளப்பி இருக்கிறது காங்கிரஸ். சர்ச்சைக்குரிய அரசியல்வாதியும் முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் உதவியாளருமான சுதீந்திர குல்கர்னி தான் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

சுதீந்திர குல்கர்னியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகரும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பருமான சாம் பிட்ரோடாவும் ஆமோதிக்கும் வகையில் பேசி உள்ளதால் இது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பி உள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து சதீந்திர குல்கர்னியின் கருத்துக்கு ஆதரவாக போட்ட பதிவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார் சாம் பிட்ரோடா.

Tap to resize

Latest Videos

காங்கிரஸ் கட்சியினரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து பாஜக நிர்வாகி ஷேஷாத் பூனாவாலா கூறுகையில், காங்கிரஸ் அம்பேத்கருக்கும், தலீத்துகளுக்கும் எதிரானவர்கள் என்பது தற்போது மீண்டும் வெட்டவெளிச்சம் ஆகி உள்ளது. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் தலீத்துகளும் பழங்குடி மக்களும் நிறைய கொடுமைகளை அனுபவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Breaking : உடைந்தது "இந்தியா"கூட்டணி- முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்!!

அதேபோல் பாஜக-வின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது : “ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான சாம் பிட்ரோடா அம்பேத்கரை அவமதித்துள்ளார். தலீத்துகளுக்கு எதிராக பேசுவது காங்கிரஸுக்கு ஒன்றும் புதிதல்ல என சாடி இருக்கிறார்.

இப்படி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும் தான் சொன்ன கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என சுதீந்திர குல்கர்னி திட்டவட்டமாக கூறி உள்ளார். இதனால் அரசியலமைப்பு சட்டத்திற்கு அதிகம் பங்காற்றியது நேருவா இல்லை அம்பேத்கரா என்கிற விவாதம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... ஞானவாபி மசூதி கட்டடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்: விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்

click me!