ஆட்டத்தை தொடங்கிவிட்டார் சுப்பிரமணிய சாமி..அயோத்தி பிரச்சினையை மீண்டும் கிளப்புகிறார்

 
Published : Mar 11, 2017, 07:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
ஆட்டத்தை தொடங்கிவிட்டார் சுப்பிரமணிய சாமி..அயோத்தி பிரச்சினையை மீண்டும் கிளப்புகிறார்

சுருக்கம்

subramaniayan samy

ஆட்டத்தை தொடங்கிவிட்டார் சுப்பிரமணிய சாமி..அயோத்தி பிரச்சினையை மீண்டும் கிளப்புகிறார்

அயோத்தி பிரச்சினை தொடர்பான வழக்கை நாள்தோறும் விசாரணை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க இருக்கிறேன் என்றுபாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமிடுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலிலும், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாரதியஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவது என்பது முக்கியமாக இருந்து வருகிறது. அதை கட்சியில் உள்ள முக்கியதலைவர்கள் மறந்துவிடாமல் அவ்வப்போது எழுப்பி வருகிறார்கள். அதிலும், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி இதை தீவிரமான எழுப்பி பிரசாரம் செய்தது. அதற்கு கைமேல் பலன் கிடைத்து, ஆட்சியை தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்ற இருக்கிறது.

இந்நிலையில், ஆறிக்கிடந்த அயோத்திப் பிரச்சினையை இப்போது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி எழுப்பு இருக்கிறார்.

முன்கதை...... 

உத்தரப்பிரதேசம், அயோத்தி நகரில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில்  முகலாய மன்னர் பாபர் காலத்தில் கட்டப்பட்ட மசூதி உள்ளது அது பாபர் மசூதி என்று அழைக்கப்பட்டு வருகிறது. 

1980களில் இந்துத்துவ அமைப்புகள் அந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கின. 1989ம் ஆண்டு அலஹாபாத் நீதிமன்றம் இந்துக்களுக்கு அங்கு பூஜை செய்ய அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல்கள் நிகழத் தொடங்கின. 1992ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அன்று கர சேவகர்கள்  பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ஒரு சிறு கோவிலை கட்டினர். இதனால் நாடு முழுவதும் கலவரங்கள் மூண்டன. இந்த பிரச்சினை பாஜக கட்சியின் அரசியல் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது.  1993ம் ஆண்டு சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தை அரசுகையகப்படுத்தியது.  அந்த இடம் வக்பு வாரியத்துக்கா?, சங் பரிவார் அமைப்புக்கா? என்பது குறித்து உத்தர பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

2010ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சர்ச்சைக்குரிய நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ராம ஜன்ம பூமி இயக்கத்துக்கும் (சங் பரிவார் அமைப்பு), ஒரு பகுதி சன்னி வக்பு வாரியத்துக்கும், மீதமுள்ள பகுதி நிர்மோஹிஅகோரா என்ற இந்து அமைப்பிற்கும் வழங்கப்பட்டன.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சங்பரிவார் சார்பிலும், வக்பு வாரியம் சார்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில்சுப்பிரமணிய சாமி, தன்னையும் ஒரு மனுதாரராகக் சேர்த்துக்கொண்டார். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், அதை விரைந்து விசாரிக்க சுப்பிரமணிய சாமி பல முறை கோரிக்கை விடுத்துள்ளார்.

டுவிட்டர்

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “ ராமர் கோவில் வழக்கை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என்று கேட்க உச்ச நீதிமன்றத்துக்கு வரும் 21-ந்தேதி செல்கிறேன். இப்போது உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆளும் அரசு எனக்கு எதிர்ப்பு தெரிவிக்காது என்று நம்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"