மாணவர்களே அலர்ட்..! இனி ஒரே நேரத்தில் இரண்டு degree வாங்கலாம்.. ஆனால் ஒரு Condition.. முழு விவரம்..

By Thanalakshmi VFirst Published Apr 13, 2022, 11:41 AM IST
Highlights

மாணவர்கள் இனி ஆன்லைன் அல்லது நேரடியாகவோ ஒரே நேரத்தில் இரண்டு பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. மேலும் இதுக்குறித்த நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை யுஜிசி இன்று வெளியிடுகிறது.
 

மாணவர்கள் இனி ஆன்லைன் அல்லது நேரடியாகவோ ஒரே நேரத்தில் இரண்டு பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. மேலும் இதுக்குறித்த நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை யுஜிசி இன்று வெளியிடுகிறது.இந்த புதிய நடைமுறை மூலம் மாணவர்கள் பல்துறை சார்ந்த அறிவைப் பெறும் வாய்ப்பினைப் பெறுவார்கள் என்று யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் கூறினார். மேலும் ஒரு பட்டப் படிப்பை கல்லுாரியிலும், மற்றொரு பட்டப்படிப்பை ஆன்லைன் வாயிலாகவும் கற்கலாம் என்றும் இரண்டையும் நேரடி வகுப்புகளாகக் கற்பது என்றால் வெவ்வேறு கல்லூரி நேரங்களில் அவற்றில் சேர்ந்து கற்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் பன்முகத் திறன்களை வளர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஒரே நேரத்தில், இரு பட்டப் படிப்புகளை பயில அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார். மாணவர்கள் விரும்பினால், இப்படிப்புகளை இரு வேறு பல்கலையில் கூட கற்கலாம் என்று தெரிவித்தார்.  மேலும் யுஜிசி நேரடியாகவோ அல்லது ஆன்லைன் முறையிலோ இரு வேறு  பாடங்களை ஒரே நேரத்தில் பயில மாணவர்களுக்கு அனுமதி அளித்திருந்தாலும் கூட பல்கலைக்கழகங்கள் இதற்கான முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இது இளங்கலை, முதுகலைக்கு மட்டுமே பொருந்தும் என்றும் முனைவர் பட்டத்திற்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பொறியியல் மாணவர்கள் கலை சார்ந்த பாடங்களையும், கலை பாடம் படிப்போர் அறிவியல் சார்ந்த பாடங்களைப் படிக்கவும் இந்த நடைமுறை ஊக்குவிக்குவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் இனி ஒரே நேரத்தில் இரண்டு பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.  மேலும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி இந்த புதிய நடைமுறை 2022-2023 கல்வி ஆண்டு முதலே செயல்பாட்டிற்கு வருகிறது. இதன்படி மாணவர்கள் இரண்டு வெவ்வேறு பாடங்களை நேரடியாக கல்லூரியிலோ அல்லது ஆன்லைனிலோ கற்றுக் கொள்ளலாம். புதிய கல்விக் கொள்கை 2020 அடிப்படையில் இந்த நடைமுறை செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.அதன்படி, மாணவர் இரண்டு டிப்ளமோ படிப்புகளையோ, 2 இளங்கலைப் படிப்புகளையோ அல்லது 2 முதுகலை படிப்புகளையோ ஒரே நேரத்தில் படிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!