கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம்… தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்!!

 
Published : Jun 12, 2017, 09:13 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம்… தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்!!

சுருக்கம்

strike in karnataka

விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேகதாது அணை கட்டக்கோரியும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள்  எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. 

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போன்று கர்நாடகாவிலும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டம் என்றும், மேகதாது அணை கட்டவேண்டும் என்றும் வலியிறுத்தி, கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. 

இதையடுத்து இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழத்திலிருந்து கர்நாடக செல்லும் தமிழக பேருந்துகள் காலை முதல் ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. இதே போல் உதகை-மைசூர் செல்லும் பேருந்துகளும் கூடலூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் அனைத்துத் பேருந்துகளும் போலீஸ் பாதகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமலிருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்