Opinion : ஆதிக் அகமதுவை முஸ்லீம் தலைவர்களாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்..!

By Asianet TamilFirst Published Mar 27, 2023, 6:44 PM IST
Highlights

இஸ்லாமியர்களிள் உள்ள குற்றவாளிகள் மட்டுமே அரசியலில் வெற்றி பெறுகிறார்கள் என்றும், அவர்களை சமூகத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அடிபணிவதாகவும் முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் நம்புகிறார்கள். இது முற்றிலும் தவறானது.
 

கொலை, கொள்ளை என பல்வேறு குற்றவியல் வழக்குகளில் சிக்கி முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆதிக் அகமது, விசாரணைக்காக அகமதாபாத்திலிருந்து, பிரயாக்ராஜூக்கு அழைத்து வரப்படுகிறார். அவருக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பேசி வருகின்றனர். ஆதிக் அகமதுவுக்கு ஆதரவாக பேசுவதன் மூலம் இஸ்லாமியர்களை கவரலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

குற்றவாளிகளை உத்தமர்களாக்கும் சில அரசியல்வாதிகளுக்கு, சில கேள்விகள்... ஆதிக் அகமது குறித்து நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? நாட்டில் நிகழும் கொலை மற்றும் கற்பழிப்பாளர்கள் அனைவரையும் நான் அறிவோமா? அகிலேஷ் யாதவ் போன்ற முக்கிய அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஏன்? ஒரு சமூகமாக முஸ்லீம்கள் ஆதிக் அகமது போன்றவர்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளனர் என்று நாம் ஏன் நம்ப வேண்டும்? மேலே உள்ள கேள்விகள், ஷாபுதீனைப் போன்ற வேறு எந்த குற்றவாளியாக இருந்து முஸ்லீம் அரசியல்வாதியாக மாறியவர்களுக்கும் இது பொருந்தும்.

மதச்சார்பின்மை என்ற பெயரில் அரசியல் கட்சிகளால் முஸ்லிம் சமூகம் ஒரு ஓட்டு வங்கியாக அபகரிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் பெரும்பான்மை சமூகத்தின் அச்சுறுத்தலைத் தூண்டிவிட்டு, மறுபுறம் இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம் மாபியாக்களை தங்கள் மீட்பர்களாகக் காட்டுவதன் மூலம் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கிகளாகக் கருதுகிறார்கள்.

அனைத்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் முஸ்லிம்கள் குற்றவாளிகளைத் தங்கள் தலைவர்களாக இஸ்லாமி மக்கள் பின்பற்றுகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கி, ஒரு வகையில் சமூகத்தின் மோசமான பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இது, இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிளவை விரிவுபடுத்துகிறது, தேசிய ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலாக மாறுகிறது. மேலும், முஸ்லிம்களை பின்தங்கிய நிலையிலேயே வைத்திருக்கிறது.

ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் குற்றவாளிகள் அரசியலுக்கு வருவதையும், அவர்கள் ஒவ்வொரு சமூகத்தின் வாக்குகளையும் அரசியல் அனுசரணையால் பெறுகிறார்கள் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை வேறுபடுத்துவது என்னவென்றால், இந்துக் குற்றவாளிகள் தேசிய அரசியலில் ஒளிந்துகொண்டு தப்பிக்கிறார்கள். அரசியலில் நுழையும் ஒரு முஸ்லீம் குற்றவாளி ஒரு ‘சமூகத் தலைவராக’ கருதப்படுகிறார்.

அகிலேஷ் யாதவ் ஒருபோதும் ஆசம் கானுக்கு ஆதரவாகப் பேசவில்லை, ஆனால் ஆதிக் அகமதுவின் பாதுகாப்பு குறித்து கொந்தளிக்கிறார். ஆசம் கான், சமாஜ்வாதி கட்சியின் மிக மூத்த தலைவர், நன்கு படித்தவர், AMUSU முன்னாள் தலைவர், தொழிற்சங்க தலைவர் மற்றும் அவர் மீது எந்த குற்றவியல் வழக்கும் இல்லை. ஆசம் கான் மக்களால் அறியப்படாதபோது, ஆதிக் அகமது மீது அகிலேஷ் யாதவ் இவ்வளவு அக்கறை கொள்வது ஏன்? ஆதிக் அகமது முஸ்லிம்களின் தலைவர் என்றும், அவருக்கு எதிரான எந்த நடவடிக்கையும் சமூகத்திற்கு எதிரான அநீதியாகவே கருதப்படும் என்றும் அகிலேஷ் மறைமுகமாக சுட்டிக்காட்டி வருகிறா்.

பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகம்! தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட பாஜக பிரமுகர்!தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

இந்த உரிமையை அவருக்கு யார் கொடுத்தது?

ஊடகங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் உருவாக்கப்பட்ட கருத்துக்களில் ஏராளமான சிக்கல் உள்ளது. ஒரு முஸ்லீம் குற்றவாளி தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் ஒரு சமூகத் தலைவராகக் காட்டப்படுகிறார். ஆனால் ஒரு முஸ்லீம் சமூக ஆர்வலர் அல்லது சிந்தனையாளர், பல தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகும் ஊடக கவனத்தைப் பெறுவதில்லை. முஸ்லிம்களில் உள்ள குற்றவாளிகள் மட்டுமே அரசியலில் வெற்றி பெறுகிறார்கள் என்றும், அவர்களை சமூகத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அடிபணிவதாகவும் முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் நம்புகிறார்கள்.

சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.பியான அதிக் அகமதுவை தெரியும், ஆனால் அதே கட்சியின் சிட்டிங் எம்.பி.யான டாக்டர் எஸ்.டி.ஹாசனை தெரியுமா? ஹாசன், மொராதாபாத்தைச் சேர்ந்த ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகம் மற்றும் அரசியல் பணிகளை செய்து வருகிறார். உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹாவின் பிஎஸ்பி எம்பி குன்வர் டேனிஷ் அலி தெரியுமா? அவர் பல ஆண்டுகளாக சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறார். 2019 இல், பிஎஸ்பி மிகக் குறைந்த நிலையில் இருந்தபோது, ​​தனது நல்ல பண்புகள் காரணமாக மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

2 மாத குழந்தையைக் கொன்ற சிறுமிகள்! பொம்மை போல நினைத்து விளையாடியதால் நேர்ந்த விபரீதம்!

ஷஹாபுதீன், முக்தார், அதீக், போன்றோர் மக்கள் மனதில் வெற்றி பெறாமலும் முஸ்லிம் தலைமையின் முகங்களாகக் காட்டப்படுகின்றன. ஆனால், பேராசிரியர் ஜாபிர் ஹுசைன், கர்பூரி தாக்கூர் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகவும், ஏறக்குறைய பத்தாண்டுகள் பீகார் சட்ட மேலவைத் தலைவராகவும், ராஜ்யசபா எம்பியாகவும், பல அரசியல் பதவிகளையும் வகித்துள்ளார் அவகள் ஒருபோதும் முஸ்லீம் மக்களின் தலைவராக ஊடகங்களால் காட்டப்படுவது இல்லை. முஸ்லிம்கள் கூட அவர்களில் குற்றவாளிகள் மட்டுமே அரசியலில் சேருகிறார்கள் என்று நம்புகிறார்கள், இது முற்றிலும் தவறானது.

இந்தியாவின் மற்ற குடிமக்களைப் போல முஸ்லிம்களும் குண்டர்களையோ, குற்றவாளிகளையோ தங்கள் தலைவர்களாக கருத முடியாது. மற்ற சமூகங்களைப் போலவே, முஸ்லிம்களிலும் சமூக விரோதிகள் மற்றும் குற்றவாளிகள் உள்ளனர். அவர்களில் சிலர் அரசியலில் சேருவது, இந்திய அரசியலில் நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சனையாகும். ஆனால், முஸ்லிம்கள் குற்றவாளிகளுக்கு வாக்களிக்கிறார்கள் என்று சொல்வதும் தவறான கருத்தாகும். 

click me!