வயிற்று வலி காரணமாக சிம்லாவில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மருத்துவப் பரிசோதனைக்காக இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த புதன்கிழமை இரவு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 8.48 மணியளவில், சுகு தனது அதிகாரப்பூர்வ இல்லமான ஓகோவருக்குத் திரும்பினார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் 9:30 மணிக்கு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையத்திற்குச் சென்றார். இமாச்சல பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் ரகுவீர் சிங் பாலி முதலமைச்சருடன் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
வெளியான தகவலின்படி, வயிற்று வலியின் காரணமாக முதல்வரை பரிசோதிக்க மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். பிறகு முதல்வருக்கு வலி குறையாததால், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முதல்வர் ஐஜிஎம்சியில் அனுமதிக்கப்பட்டார் மற்றும் சில மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், பரிசோதனையில் வயிற்றுத் தொற்று காரணமாக வலி ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்தார். மேலும் முதல்வர் 2 நாட்கள் ஓய்வில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
ஐஜிஎம்சியில் நடைபெற்ற சிகிச்சையின் போது, முதல்வர் உடல்நிலையை கண்காணிக்க, துறைத் தலைவர்களில் 6 பேர் கொண்ட டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டது. குழுவில் இரைப்பை மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் பிரிஜ் சர்மா, டாக்டர் பல்பீர் இதயத் துறை மருத்துவர், பிசி நேகி அறுவை சிகிச்சை துறை தலைவர், டாக்டர். சாண்டல் நரம்பியல் துறை தலைவர், டாக்டர். கம்போஸ் ரெய்னா மற்றும் கதிரியக்க துறை தலைவர் டாக்டர் அனுப் ஆகியோர் அந்த குழுவில் இருந்தனர்.
முதலமைச்சரின் முக்கிய ஊடக ஆலோசகர் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், முதல்வர் உணவு பழக்கத்தால் வயிற்றில் வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும். முதலமைச்சருக்கு வயிற்றில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்றும், ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D