இந்தியாவில் 6000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு.. மாநில வாரியாக முழு விவரம்

By karthikeyan VFirst Published Apr 9, 2020, 4:25 PM IST
Highlights

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6000ஐ நெருங்கிவிட்ட நிலையில் மாநில வாரியாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா தீவிரமடைந்துவருவதால் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோசனைகள் நடந்துவருகின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்ததாக இல்லை. தொடர்ந்து அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. 

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த மாநிலங்களில் தான் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சங்களை எட்டிவருகிறது. ஆரம்பத்தில் மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த கேரளாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக பெரியளவில்லை. 

இந்தியாவில் மொத்தம் 5917 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 178 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பாகவே இரட்டை சதமடித்த கேரளாவில் இப்போது பாதிப்பு எண்ணிக்கை 345ஆக உள்ளது. 

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

மகாராஷ்டிரா - 1297

தமிழ்நாடு - 738

டெல்லி - 669

ராஜஸ்தான் - 413

உத்தர பிரதேசம் - 361

தெலுங்கானா - 427

மத்திய பிரதேசம் - 385

ஜம்மு காஷ்மீர் - 158

லடாக்  - 14

கர்நாடகா - 191

ஹரியானா - 147

குஜராத் - 241

ஆந்திரா - 348

பஞ்சாப் - 106

மேற்கு வங்கம் - 103

உத்தரகண்ட் - 33

ஹிமாச்சல பிரதேசம் - 28

சத்தீஸ்கர் - 19

சண்டிகர் - 18

பீகார் - 51

புதுச்சேரி - 6

கோவா- 7 

அந்தமான் நிகோபார் - 11

அசாம் - 27

ஜார்கண்ட் - 4.
 

click me!