உஷார் மக்களே..! வங்கிகளுக்கு அடுத்தடுத்து தொடர் விடுமுறை..!

By Manikandan S R SFirst Published Apr 9, 2020, 3:29 PM IST
Highlights

நாளை புனித வெள்ளியும், சனிக்கிழமை இரண்டாவது வார விடுமுறையும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறையும் வருகிறது. அதன் பின்னர் திங்கட்கிழமை செயல்படும் வங்கிகள் மீண்டும் 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழ்புத்தாண்டு காரணமாக விடுமுறையில் இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். அரசுத் துறைகளிலும் மிக முக்கியமான பணிகள் மட்டுமே இயங்கி வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் வங்கிகள் தடையின்றி செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மக்கள் அவசர தேவைக்கு மட்டுமே வங்கிக்கு வர வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அவ்வாறு வரும் மக்களிடமும் வங்கிகளில் சமூக விலகல் கடுமையாக பின்பற்றப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது மத்திய அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கி வருவதன் காரணமாக வங்கி சேவை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் அனைத்து தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் நாளை முதல் 3 நாட்கள் மூடப்படுகிறது.

நாளை புனித வெள்ளியும், சனிக்கிழமை இரண்டாவது வார விடுமுறையும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறையும் வருகிறது. அதன் பின்னர் திங்கட்கிழமை செயல்படும் வங்கிகள் மீண்டும் 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழ்புத்தாண்டு காரணமாக விடுமுறையில் இருக்கிறது. வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனினும் அனைத்து ஏடிஎம்களிலும் பணத்தை முழு அளவில் நிரப்புவதற்கு அரசு அறிவித்திருக்கிறது. பணத்தட்டுப்பாடு இல்லாத வகையில் ஏடிஎம்களில் பணம் வழங்க தயாராக இருக்க வேண்டும் என அப்பணியில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு கூறியிருக்கிறது.

click me!