மகாராஷ்டிராவில் 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. மாநில வாரியாக முழு விவரம்

Published : Apr 08, 2020, 04:31 PM IST
மகாராஷ்டிராவில் 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. மாநில வாரியாக முழு விவரம்

சுருக்கம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5300ஐ கடந்துவிட்ட நிலையில், மாநில வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை பார்ப்போம்.   

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 5300ஐ கடந்துவிட்டது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தினமும் அதிகரித்துவரும் நிலையில், ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எனவே ஊரடங்கு ஏப்ரல் 14க்கு பிறகும் நீடிக்க வாய்ப்புள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை, கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்காகத்தான் உள்ளது. இந்தியாவில் 401 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 

இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தான் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. மகாராஷ்டிராவில் 1078 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 690 பேரும் டெல்லியில் 576 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களும் தான் கொரோனா பாதிப்பில் முதல் மூன்று இடங்களில் உள்லன. தெலுங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு கடுமையாகத்தான் உள்ளது. 

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு குறித்து பார்ப்போம்.

மகாராஷ்டிரா - 1078

தமிழ்நாடு - 690

டெல்லி - 576

கேரளா - 336

ராஜஸ்தான்  - 348

உத்தர பிரதேசம் - 341

தெலுங்கானா - 364

கர்நாடகா - 181

ஆந்திரா - 329

ஹரியானா - 147

பஞ்சாப் - 99

ஜம்மு காஷ்மீர் - 125

குஜராத் - 179

மத்திய பிரதேசம் - 268

மேற்கு வங்கம் - 99

சத்தீஸ்கர் - 19

சண்டிகர் - 18

பீகார் - 38

ஒடிசா - 42

உத்தரகண்ட் - 32

ஹிமாச்சல பிரதேசம் - 28

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!