கொரோனாவிலிருந்து தப்பிக்க நாட்டு மருந்து சாப்பிட்ட11 பேர்.. உயிருக்கு போராட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 8, 2020, 12:01 PM IST
Highlights

கொரோனா பீதியால் எதை மருந்தாக எடுத்துக் கொள்வது என குழப்பத்தில் உள்ள மக்கள் பல்வேறு வகையான நாட்டு மருந்துகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். 
 

கொரோனா பீதியால் எதை மருந்தாக எடுத்துக் கொள்வது என குழப்பத்தில் உள்ள மக்கள் பல்வேறு வகையான நாட்டு மருந்துகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். 

ஆந்திராவில், ஊமத்தங்காய் விதை தின்றால் கொரோனா பரவாது என்ற வதந்தியை நம்பி, அதை சாப்பிட்ட 11பேர், கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ஆந்திர மாநிலம் ஆரம்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் பாபு என்பவர், சமூக வலைதளத்தை பார்த்துக் கொண்டிடிருந்தபோது, ஊமத்தங்காய் விதையைத் தின்றால் கொரோனா வைரஸ் வராது என ஒரு செய்தி வந்துள்ளது. 

இதை நம்பிய அவர், தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று, ஊமத்தம் காய் விதைகளை எடுத்து வந்துள்ளார். பின்னர், அந்த விதைகளை அரைத்து நீரில் கலந்து, 2 குழந்தைகள் உள்பட 11 பேர் பருகியுள்ளனர். 

இதை குடித்த சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், அவர்கள் அனைவரையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை நம்பக்கூடாது என எத்தனை முறை எச்சரித்தாலும், அதை அலட்சியப்படுத்தியதன் விளைவாக, தற்போது 11பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
 

click me!