தமிழ்நாட்டை ஓவர்டேக் செய்த டெல்லி.. மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

Published : Apr 12, 2020, 02:28 PM IST
தமிழ்நாட்டை ஓவர்டேக் செய்த டெல்லி.. மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சுருக்கம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இரண்டாமிடத்தில் இருந்த தமிழ்நாட்டை ஓவர்டேக் செய்து டெல்லி இரண்டாமிடத்தில் உள்ளது. இந்தியாவில் 8500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில வாரியாக கொரோனா பாதிப்பு  விவரத்தை பார்ப்போம்.   

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. ஆனாலும் கொரோனா இந்தியாவில் இன்னும் சமூக தொற்றாக பரவவில்லை. சமூக தொற்றாக பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துவருவதால் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும், 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது..

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் தான் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சங்களை எட்டிவருகிறது. ஆரம்பத்தில் மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த கேரளாவில் கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களாக கட்டுக்குள் வந்துள்ளது.  

இந்தியாவில் மொத்தம் 8504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக  1761 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இரண்டாமிடத்தில் இருந்துவந்த தமிழ்நாட்டை ஓவர்டேக் செய்து டெல்லி இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 969ஆக உள்ளது. ஆனால் டெல்லியில் 1069 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

மகாராஷ்டிரா - 1761

டெல்லி - 1069

தமிழ்நாடு - 969

ராஜஸ்தான் - 751

உத்தர பிரதேசம் - 452

தெலுங்கானா - 504

மத்திய பிரதேசம் - 532

கேரளா - 373

ஜம்மு காஷ்மீர் - 224

லடாக்  - 15

கர்நாடகா - 215

ஹரியானா - 177

குஜராத் - 493

ஆந்திரா - 405

பஞ்சாப் - 158

மேற்கு வங்கம் - 134

உத்தரகண்ட் - 35

ஹிமாச்சல பிரதேசம் - 32

சத்தீஸ்கர் - 19

சண்டிகர் - 18

பீகார் - 64

புதுச்சேரி - 7

கோவா- 7 

அந்தமான் நிகோபார் - 11

அசாம் - 29

ஜார்கண்ட் - 17.

PREV
click me!

Recommended Stories

ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதி? வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய விமானி? அதிர்ச்சி தகவல்!
முஸ்லிம்கள் சக்தி வாய்ந்தவர்களாக மாறும்போதுதான் இந்தியா வளர்ந்த நாடாகும்.. ஒவைசி தடாலடி..!