Farmer's Protest : நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் இடையிலான நான்காவது சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்த பின்னர், சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) - டெல்லி சலோ அணிவகுப்பை வழிநடத்துபவர்களுடன் நேரடியாக தொடர்பில்லாத விவசாய சங்கங்களின் அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) அரசாங்கத்தின் 5- ஆண்டு MSP ஒப்பந்த சலுகையை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாயத் தலைவர்களுடனான சந்திப்பிலிருந்து வெளியேறிய பிறகு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகிய மூன்று மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு ஐந்தாண்டு திட்டத்தை முன்மொழிந்ததாக கூறினார்.
அந்த திட்டம் பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்குதல் என்பதாகும். எவ்வாறாயினும், இன்று திங்கள்கிழமை மாலை SKM இந்த திட்டத்தை "விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை திசைதிருப்புவதாக" உள்ளது என்று விமர்சித்தது, மேலும் "அனைத்து பயிர்களையும் (23, மேற்கூறிய ஐந்து உட்பட) வாங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த கொள்முதல் C2+50% MSP, சுவாமிநாதன் கமிஷனின் சூத்திரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் தற்போதுள்ள A2+FL+50% முறை அல்ல என்றும் SKM மேலும் வலியுறுத்தியது. இதுவரை நடந்த நான்கு சுற்றுப் பேச்சுக்களில் வெளிப்படைத்தன்மை இல்லாததாக மத்திய அரசை SKM விமர்சித்துள்ளது.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மத்திய அரசின் குழுவுடன் கூட்டத்தை நடத்திய விவசாயிகள் தலைவர்கள், அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து அடுத்த இரண்டு நாட்களில் தங்கள் மன்றங்களில் விவாதித்து அதன் பின்னர் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதாக தெரிவித்தனர். இக்கூட்டத்தின் போது MSP மீதான சட்டம், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகள் மற்றும் கடன் தள்ளுபடி போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றதாக விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் குறிப்பிட்டார்.
"பிப்ரவரி 19-20 தேதிகளில் நாங்கள் எங்கள் மன்றங்களில் விவாதித்து, இது குறித்து நிபுணர்களின் கருத்தை எடுத்து அதன்படி முடிவெடுப்போம்" என்று மற்றொரு விவசாயி தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறினார்.
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள், சட்டப்பூர்வ MSP உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தின் மத்தியில் இந்த கூட்டம் நடைபெற்றது.
நிறைவேற்ற வேண்டிய பல நல்ல பணிகள் எஞ்சியுள்ளன: பிரதமர் மோடி!