நிறைவேற்ற வேண்டிய பல நல்ல பணிகள் எஞ்சியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். ஸ்ரீ கல்கி கோயிலின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார். ஸ்ரீ கல்கி கோயில் நிறுவன அறக்கட்டளையால் ஸ்ரீ கல்கி கோயில் கட்டப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தக் கோயிலின் திறப்பு விழாவிற்காக, 18 ஆண்டுகள் காத்திருப்பதாக தெரிவித்தார். தாம் நிறைவேற்ற வேண்டிய பல நல்ல பணிகள் எஞ்சியிருப்பதாகத் தோன்றுகிறது என்ற அவர், ம்க்கள், துறவிகளின் ஆசீர்வாதத்துடன் முடிக்கப்படாத பணிகளைத் தாம் தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்றார்.
கோயிலின் கட்டிடக்கலை பற்றி விளக்கிய பிரதமர், கோயிலில் 10 கர்ப்ப கிரகங்கள் இருக்கும் என்றும், அங்கு இறைவனின் 10 அவதாரங்களும் இடம் பெறும் என்றும் கூறினார். இந்த 10 அவதாரங்கள் மூலம், மனித வடிவம் உட்பட கடவுளின் அனைத்து வடிவங்களையும் வேதங்கள் வழங்கியுள்ளன என்று பிரதமர் மோடி விளக்கினார்.
இதுபோன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து வருவதன் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். ஆன்மீக மறுமலர்ச்சி குறித்து தொடர்ந்து பேசிய அவர், காசியில் உள்ள விஸ்வநாதர் கோயில், காசியின் புனரமைப்பு, மகாகால் மஹாலோக், சோம்நாத், கேதார்நாத் கோயில் பற்றி குறிப்பிட்டார். வளர்ச்சியுடன் கூடிய பாரம்பரியம் என்ற தாரக மந்திரத்துடன் நாம் முன்னேறி வருகிறோம் என்று அவர் கூறினார். ஆன்மீக மையங்களின் மறுமலர்ச்சியை உயர் தொழில்நுட்ப நகர்ப்புற உள்கட்டமைப்பு, கோயில்கள், புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுதல், வெளிநாட்டு முதலீட்டுடன் வெளிநாட்டிலிருந்து கலைப்பொருட்களை திரும்ப ஒப்படைத்தல் ஆகியவற்றை அவர் மீண்டும் குறிப்பிட்டார். காலச் சுழற்சி நகர்வதை இது குறிப்பிடுவதாக அவர் தெரிவித்தார். செங்கோட்டையிலிருந்து தாம் விடுத்த அழைப்பை நினைவுகூர்ந்த பிரதமர், "இதுதான் தருணம், இதுவே சரியான தருணம்" என்று கூறினார்.
தோல்வியிலிருந்து வெற்றி பெறுவது எப்படி என்பது இந்தியாவுக்குத் தெரியும் என்று பிரதமர் கூறினார். இன்றைய இந்தியாவின் அமிர்த காலத்தில், இந்தியாவின் பெருமை, உயரம் மற்றும் வலிமையின் விதை முளைத்து வருகிறது" என்று அவர் மேலும் கூறினார். துறவிகள், மதத் தலைவர்கள் புதிய கோயில்களை நிர்மாணித்து வருவதால், நாட்டின் கோயிலை நிர்மாணிக்கும் பணி தனக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். நாடு என்னும் கோயிலின் மகிமையின் மகத்துவம் மற்றும் விரிவாக்கத்திற்காக நான் இரவும் பகலும் உழைத்து வருகிறேன் என்று அவர் மேலும் கூறினார். இந்தியா ஒரு கட்டத்தில் பின்பற்றாத நிலையில் தற்போது முதல் முறையாக, நாங்கள் உதாரணத்தை வகுக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த உறுதிப்பாட்டின் முடிவுகளைப் பட்டியலிட்ட பிரதமர், டிஜிட்டல் தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளின் மையமாக இந்தியா மாறி வருகிறது, இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது, சந்திரயான் வெற்றி, வந்தே பாரத் மற்றும் நமோ பாரத் போன்ற நவீன ரயில்கள், வரவிருக்கும் புல்லட் ரயில்கள், உயர் தொழில்நுட்ப நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளின் வலுவான கட்டமைப்பு ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். இந்தச் சாதனை இந்தியர்களைப் பெருமிதம் கொள்ள வைத்துள்ளது என்றும், நாட்டின் மீதான நேர்மறையான சிந்தனை, நம்பிக்கையின் இந்த அலை ஆச்சரியமாக இருக்கிறது. அதனால்தான் இன்று நமது திறன்கள் எல்லையற்றவையாக உள்ளன, நமக்கான சாத்தியங்களும் மகத்தானவை என்று அவர் கூறினார்.
ரூ.8.33 லட்சம் கோடி கடன் அதிகரிப்புதான் திமுக அரசின் சாதனை: வானதி சீனிவாசன்!
ஒரு நாடு கூட்டு முயற்சியின் மூலம் வெற்றிபெறும் சக்தியைப் பெறுகிறது என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். தற்போது இந்தியாவில் ஒரு மகத்தான கூட்டு உணர்வு இருப்பதாக அவர் கூறினார். ஒவ்வொரு குடிமகனும் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற உணர்வுடன் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 4 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகள், 11 கோடி கழிப்பறைகள், 2.5 கோடி குடும்பங்களுக்கு மின்சாரம், 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய் நீர், 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் உணவு, 10 கோடி பெண்களுக்கு மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள், 50 கோடி ஆயுஷ்மான் அட்டைகள், 10 கோடி விவசாயிகளுக்கு வேளாண் வருவாய் ஆதரவு நிதி, பெருந்தொற்று காலத்தில் இலவசத் தடுப்பூசி, தூய்மை இந்தியா ஆகிய திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
அரசுப் பணிகளில் விரைவு, ஏராளமான பணிகள் ஆகியவற்றுக்காக நாட்டு மக்களைப் பிரதமர் பாராட்டினார். இன்றைய மக்கள் அரசின் திட்டங்களின் பலன்களை ஏழைகள் பெற உதவுவதுடன், 100 சதவீதம் நிறைவு பெறுவதற்கான இயக்கத்தில் பங்கேற்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். ஏழைகளுக்குச் சேவை செய்யும் உணர்வு, இந்தியாவின் ஆன்மீக விழுமியங்களிலிருந்து உருவானது என்று குறிப்பிட்ட அவர், மக்களிடையே கடவுள் இருப்பது என்பதற்கு ஊக்கமளிக்கிறது என்றார். 'வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குதல்' மற்றும் 'நமது பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்வது' ஆகிய ஐந்து கொள்கைகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.