3 நாள்தான் விழா….பாதிப்பை சரிசெய்ய 10 வருஷம் ஆகுமாம்...வாழும் கலை அமைப்பு நடத்திய விழாவால் ‘களேபரம்’

Asianet News Tamil  
Published : Apr 12, 2017, 10:02 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
3 நாள்தான் விழா….பாதிப்பை சரிசெய்ய 10 வருஷம் ஆகுமாம்...வாழும் கலை அமைப்பு நடத்திய விழாவால் ‘களேபரம்’

சுருக்கம்

Sri Ravi sankar

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய மிகப்பெரிய கலாச்சாரத் திருவிழாவால்  யமுனை நதிச் சமவெளி கடுமையாக சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க 10 ஆண்டுகளும், ரூ.13.29 கோடியும் செலவாகும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சஷி சேகர் தலைமையிலான நிபுணர்கள் குழு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் இந்த அறிக்கையை அளித்துள்ளது.

 

தேசியப் பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு வாழும் கலை அமைப்பு ‘உலக கலாச்சாரத் திருவிழா’ நடத்த யமுனை நதிச் சமவெளியில் அனுமதி அளித்தது. நிகழ்ச்சியை தடை செய்ய முடியாவிட்டாலும் ரூ.5 கோடி டெபாசிட் செய்ய வாழும் கலை அமைப்புக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது

அதன் பின் 4 உறுப்பினர் நிபுணர்கள் குழு வாழும் கலை அறக்கட்டளை ஏற்படுத்திய ‘மிகப்பெரிய பரந்துபட்ட சேதத்திற்கு’ ரூ.100-120 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. 

2-வதாக அமைக்கப்பட்ட 7 உறுப்பினர் நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு யமுனை நதி வெள்ளச்சமவெளி முழுதும் நதிப்படுகை சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியது.

நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சஷி சேகர் தலைமையிலான நிபுணர்கள் குழு தனது 47 பக்க  அறிக்கையில் கூறியிருப்பதாவது-

“யமுனை நதியின் 120 ஹெக்டேர்கள் (சுமார் 300 ஏக்கர்கள்) மேற்கு வலது புறக்கரைப்பகுதி மற்றும் 50 ஹெக்டேர்கள் இடதுக்கரை சமவெளியும் சுற்றுப்புற சூழல் ரீதியாக பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது


“தரை மட்டமாக்கப்பட்டு, கடினப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இது நீர் வளத்துக்கு தகுதியற்றற பகுதியாகிவிட்டது. இயற்கை தாவரங்களும் முளைக்க வாய்ப்பில்லை. மிகப்பெரிய பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்ட பகுதி மிகவும் கடினமான கற்கள், சிமென்ட்களால் கட்டப்பட்டுள்ளது.

 பெரிய அளவில் மண்ணும், கட்டிட இடிபாடுகளும் கடுமையாக இட்டு நிரப்பப்பட்டுள்ளது. 3 நாட்கள் கலைவிழாவுக்கு முன்பு அப்பகுதியில் இருந்த இயற்கையான விளைச்சல் இனி இருக்காது. அந்த அளவுக்கு அந்த  இடம் மாறியுள்ளது. எனவே இதனை மறுசீரமைக்க 10 ஆண்டுகள் பிடிக்கும் இதற்கு ரூ.13.29 கோடி செலவாகும்” எனத் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

நாட்டையே உலுக்கிய சம்பவம்... அவதூறு பரப்பிய பெண்; அவமானத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட தீபக்
பாஜகவின் புதிய தலைவராகிறார் நிதின் நபின்.. வேட்புமனு தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?