
இலங்கை, வங்காளதேசம், நேபாளம், துருக்கி உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் வர்த்தகத்தை அதிகப்படுத்தி, ஏழ்மையை விரட்டும் நோக்கில் நாடுகளுக்கு இடையே ரெயில் போக்குவரத்தை தொடங்க மத்திய ரெயில்வேஅமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
மாநாடு
‘ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் சார்பில் சர்வதேச மாநாடு’ டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது-
வளர்ச்சி
உலகில் ஆசிய கண்டனம் என்பது எதிர்காலத்தில் முக்கிய வளர்ச்சி மையமாக திகழப் போகிறது. இந்த வளர்ச்சியில் ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளும் எப்படி கலந்து கொண்டு, பங்கேற்கப் போகின்றன என்பது மிகவும் சுவாரஸ்யமானது. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் தங்களுக்கு வர்த்தக தொடர்பை அதிகப்படுத்தியும், ஏழ்மையையும் விரட்டவும் சரக்கு ரெயில்போக்குவரத்து சேவையை அதிகப்படுத்த வேண்டும்.
பலன் கிடைக்கும்
தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவையும் இணைக்கும் வகையில் ரெயில்போக்குவரத்து செயல்படுத்துவது மிகச் சிறப்பானது. இதற்கு நாடுகளின் புரிந்துணர்வு என்பது மிக முக்கியும். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்த ஆசிய மண்டலம் முழுமைக்கும் பலன் கிடைக்கும்.
நேபாளம், பூடான்
இந்திய ரெயில்வே திட்டப்படி நேபாளம், பூடான் வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளை இணைக்கும் வகையில் ரெயில்திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டோம்.
எங்களின் திட்டப்படி இப்போது நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கும், கொல்கத்தாவுக்கும் ரெயில் போக்குவரத்து தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். அதேபோல வங்காளதேசம் முதல் துருக்கியின்இஸ்தான்புல் நகரம் வரை ரெயில் போக்குவரத்து தொடங்கும் வழியை கண்டுபிடிக்க வேண்டும்.
இந்தியா-இலங்கை
இலங்கை-இந்தியா இடையே மிகப்பெரிய ரெயில்வே போக்குவரத்தையும் தொடங்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானுடன் ஏற்கனவே ரெயில் தொடர்பு இருக்கிறது, வங்காளதேசத்துடன் ரெயில்தொடர்புக்கான திட்டம் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.
ஏழ்மை ஒழிக்க
அதேபோல, தெற்கு மற்றும் தென் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்துரெயில் போக்குவரத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மக்களும், பொருட்களும் எளிதாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு நகர முடியும். வளர்ச்சியும் வேகப்படும். அண்டை நாடுகளுடன் ரெயில்வேபோக்குவரத்து மூலம் இணைந்திருக்கும் போது, அது பொருளாதார வளர்ச்சிக்கும், ஏழ்மை ஒழிப்புக்கும் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.