
ராஜீவ் படுகொலை விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாமியாரான சந்திரா சாமி இன்று மே 23 ம் தேதி மரணம் அடைந்தார். 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு விசாரணையின்போது டெல்லியை சேர்ந்த சந்திரா சாமி என்னும் சாமியாரின் பெயரும் இருந்தது.
ராஜீவை கொல்ல வந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் சந்திரா சாமியை முன்கூட்டியே சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்று அப்போது ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனால் ராஜீவ் கொலைச் சதியில் டெல்லியை சேர்ந்தவர்களின் பங்கும் இருக்கிறது என்ற சந்தேகம் வலுவாக எழுந்தது. அதேசமயம் சந்திராசாமிக்கு சர்வதேச தொடர்புகளும் நிறைய இருந்தன. ராஜீவ் கொலை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் தனது பரிந்துரையில், சர்ச்சை 'சந்திரா சாமியையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
ஆனால் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு மிக நெருக்கமாக இருந்த சந்திரா சாமியை யாராலும் தொட முடியவில்லை. இதன் பிறகு பல ஆண்டுகள் ஊடக படாமல் மறைந்து வாழ்ந்த சர்ச்சை சந்திரா சாமி... ராஜீவ் காந்தி படுகொலையான 26 வது நினைவு தினத்துக்கு இரண்டு நாள்கள் கழித்து உடல் நலக் குறைவால் மரணம் அடைந்திருக்கிறார்.