SpiceJet: இவ்வளவு கம்மியான விலையா..சூரரை போற்று பட பாணியில் அதிரடி ஆஃப்ர்.. இனி நீங்களும் பறக்கலாம்..

Published : Dec 27, 2021, 04:58 PM ISTUpdated : Dec 27, 2021, 05:09 PM IST
SpiceJet: இவ்வளவு கம்மியான விலையா..சூரரை போற்று பட பாணியில் அதிரடி ஆஃப்ர்.. இனி நீங்களும் பறக்கலாம்..

சுருக்கம்

இந்தியாவில் விமான சேவையை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், உள்நாட்டு விமான போக்குவரத்தில் குறைந்த விலையில் பயணம் மேற்கொள்ளும் வகையில் அதிரடியாக  டிக்கெட்டுகளை ரூ.1, 122 முதல் வழங்கும் சிறப்பு ஆஃப்பரை தொடங்கியுள்ளது.   

ஸ்பைஸ்ஜெட்டின் ’Wow Winter Sale’ஆஃபர் மூலம் இன்று முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை குறைந்த விலையில் விமான சேவைகளுக்கான முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிரடி சிறப்பு விற்பனையில், ஜனவரி 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி வரை இந்த முன்பதிவு செய்யப்பட்ட டிக்கேட் மூலம் பயணம் செய்துக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், அடுத்த முறை பயணத்திற்கு பயன்படுத்தக்கூடிய ரூ.500 மதிப்புள்ள விமான வவுச்சரை வழங்குகிறது. இந்த சலுகையின் கீழ் விற்பனைக் கட்டணம் 15 நாட்களுக்கு முன் முன்பதிவுக்கு செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த சலுகை மூலம் இருக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விற்பனைக் கட்டண டிக்கெட்டுகளுடன் மாற்றுக் கட்டணத்தில் ஒருமுறை தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் ”Wow Winter Sale”மூலம் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அதன் உள்நாட்டு விமான போக்குவரத்தில் சென்னை- பெங்களூரு, பெங்களூரு- சென்னை, சென்னை- ஹைதராபாத், ஜம்மு- ஸ்ரீநகர் போன்ற இடங்களுக்கு குறைந்த விலை டிக்கேட் கட்டணமாக ரூ. 1,122 முதல் ஒரு வழி சேவையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. கூடுதல் அஃப்பராக, விற்பனைக் கட்டண டிக்கெட்டுகளில் மாற்றக் கட்டணத்தை ஒரு முறை தள்ளுபடி செய்வதையும் விமான நிறுவனம் வழங்குகிறது. இந்த சிறப்பு விற்பனைக் கட்டணத்தின் கீழ் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள் பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் தங்கள் விமானத் தேதியையும் மாற்றிக்கொள்ள முடியும்.  மேலும் இந்த சிறப்பு விற்பனை கட்டணத்தில் முன்பதிவு செய்யும் போது ரூ. 500 மதிப்புள்ளவிமான வவுச்சர் , விருப்பமான இருக்கைகள் மற்றும் முன்னுரிமை சேவைகள் போன்றவை வழங்கப்படவுள்ளது.இந்தச் சலுகையைப் பெற, வாடிக்கையாளர்கள் ஸ்பைஸ் ஜெட்டின் இணையதளத்தில் ‘ADDON25’என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். மேலும் இலவச விமான வவுச்சர்களை ஜனவரி 15 முதல் 31 தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். 
 

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
ஒரே ஃபிரேம்ல ரெண்டு GOAT.. சச்சின் கையால் 'நம்பர் 10' ஜெர்சி வாங்கிய மெஸ்ஸி!