ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் பைலட்களுக்கு ஊதிய உயர்வை வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் பைலட்களுக்கு ஊதிய உயர்வை வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் கடந்த சில மாதங்களாக தொழில்நுட்ப கோளாறை சந்தித்து வருகின்றன. இதை அடுத்து 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. அதனை தொடர்ந்து அன்மையில் அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட ஊழியர்களுக்கு (LWP) எனும் முறையில் ஊதியமில்லா விடுப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ராஜ்கோட்டில் பிரதமர் மோடி ஊர்வலம்... இஸ்லாமிய சமூகத்தினர் உட்பட பொதுமக்கள் பலர் மலர் தூவி உற்சாக வரவேற்பு!!
இது அந்த நிறுவனத்தின் நிதி நெருக்கடி வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாலியை கழற்றி வைத்துவிட்டு தேர்வுக்கு போங்க.. உருவான இந்து Vs முஸ்லீம் சர்ச்சை - தெலங்கனாவில் பரபரப்பு
அதன்படி, விமானிகள் மாதத்தில் 80 மணி நேரத்திற்கு மேல் பணி செய்தால் அவர்களின் மாத ஊதியம் 7 லட்சம் என உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விமானத்தின் செயல்பாடும் அதிகரிக்கும் என்றும் அதனால் நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், இது நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.