மக்களே கவனத்திற்கு !! தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில் மாற்றம்..? வெளியான முக்கிய தகவல்..

Published : Jun 10, 2022, 06:13 PM IST
மக்களே கவனத்திற்கு !! தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில் மாற்றம்..? வெளியான முக்கிய தகவல்..

சுருக்கம்

தெற்கு ரயில்வேயில், புதிய கால அட்டவணை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ரயில்களின் வேகம் அதிகரிப்பதோடு, புதிய ரயில்கள் அறிவிப்பு இடம் பெற வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

தெற்கு ரயில்வேயில் நுாற்றுக்கணக்கான விரைவு ரயில்கள்  இயக்கப்படுகின்றன. ரயில்களின் இயங்கும் நேரம், வேகம் குறித்து ஆண்டுதோறும் புதிய கால அட்டவணை வெளியிடப்படும். அப்போது, பயணியரின் கோரிக்கைகள் கருதில் கொள்ளப்பட்டு மாற்றம் செய்யப்படும். 

மேலும் படிக்க: மதுரையில் வேகமெடுக்கும் ஒமைக்ரான்.. 2 நாளில் 7 பேர் பாதிப்பு..அச்சத்தில் மக்கள்

அதுபோல, நிர்வாக ரீதியான மாற்றங்களையும் கொண்டு வரப்படும். அதன்படி, தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணையை, அடுத்த மாதம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால், பயணியரின் பயண நேரம் குறையும். அதுபோல், பல்வேறு வழித்தடங்களில் புதிய ரயில்கள் இயக்கவும் வாய்ப்புகள் உள்ளன என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: நித்யானந்தா இறந்துவிட்டாரா? கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பதிவால் பரபரப்பு!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாட்டின் முதல் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ஆன்லைனில் வாக்கி-டாக்கி விற்பனை.. பிளிப்கார்ட், மீஷோ உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு விழுந்த அடி!