Sonia Gandhi tested Covid positive: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Jun 02, 2022, 12:55 PM ISTUpdated : Jun 02, 2022, 01:00 PM IST
Sonia Gandhi tested Covid positive: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று..!

சுருக்கம்

Congress Leader Sonia Gandhi tested Covid positive: சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமலாக்கத் துறை விசாரணைக்கு ஜூன் 8 ஆம் தேதி சோனியா காந்தி ஆஜராக இருந்தார்.   

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. முன்னதாக நேஷனல் ஹெரால்டு வழக்குத் தொடர்பாக சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுத்த நிலையில், இன்று சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமலாக்கத் துறை விசாரணைக்கு ஜூன் 8 ஆம் தேதி சோனியா காந்தி ஆஜராக இருந்தார். 

கடந்த வாரம் சோனி காந்தி பல்வேறு தலைவர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களுடன் தொடர்ந்து சந்திப்புகளை நடத்தி வந்தார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரந்தீப் சிங் சர்ஜ்வாலா தெரிவித்தார். நேற்று மாலை சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

லேசான அறிகுறிகள்:

சோனியா காந்திக்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

“சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று மாலை சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். மருத்துவ ஆலோசனை நடைபெற்றது. அவர் மீண்டு வருகிறார்,” என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரந்தீப் சிங் சர்ஜ்வாலா தெரிவித்தார். 

அமலாக்கத் துறை நோட்டீஸ்:

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சார்பில் கடந்த வாரம் புதன் கிழமை அன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை 2012 முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

விமானத்தில் புகுந்த புறா! நடுவானில் இண்டிகோ விமானப் பயணிகளுக்கு ஆச்சரியம்!
நேரு சொன்னதைத் திரிக்கும் மோடி.. வந்தே மாதரம் விவாதத்தில் பிச்சு உதறிய பிரியங்கா காந்தி!