தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகன்… பாராட்டும் நெட்டிசன்கள்… இணையத்தில் வீடியோ வைரல்!!

Published : May 12, 2023, 05:47 PM IST
தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகன்… பாராட்டும் நெட்டிசன்கள்… இணையத்தில் வீடியோ வைரல்!!

சுருக்கம்

டெல்லியில் ஒருவர் தனது தந்தையை முதல்முறையாக விமானத்தில் ஏற்றிச் சென்று தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

டெல்லியில் ஒருவர் தனது தந்தையை முதல்முறையாக விமானத்தில் ஏற்றிச் சென்று தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். பெரும்பாலான மக்கள் தொலைதூரப் பயணங்களுக்கு ரயில் அல்லது விமானப் பயணத்தைத் தேர்வு செய்கிறார்கள். சாமானிய மக்கள் பொதுவாக போக்குவரத்துக்கு ரயில்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டியவர்கள் விமானங்களைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் விமானப் பயணம் எல்லோருக்கும் கட்டுப்படியாகாது.

இதையும் படிங்க: சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களை விற்கக் கூடாது.. ஆன்லைன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு செக்..

விமானத்தில் பயணம் செய்வது என்பது சாதாரண மக்களின் கனவு. சிலர் சிறுவயதில் விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்கள். சிலர் வேலை கிடைத்தவுடன் சம்பளத்தில் விமானத்தில் பயணம் செய்கிறார்கள். விமானக் கட்டணம் அவ்வளவு மலிவாக இல்லாததால் விமானத்தில் ஏறுவது கனவாகவே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது அனைவரின் கனவு. ஆனால் நிதிப் பிரச்சனையால் எல்லோராலும் அதைச் செய்ய முடியாது.

இதையும் படிங்க: எம்எஸ்சிஐ இன்டெக்சில் இருந்து நீக்கம் செய்யப்பட்டஅதானி பங்குகள்; காரணம் என்ன?

ஆனால் இங்கே ஒருவர் தன் தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் தன் தந்தையை விமானத்தில் ஏற்றிச் சென்றார். அவரது இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.  @jatin_lamba_ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், மகன் தனது தந்தையை முதல்முறையாக விமானத்தில் அழைத்துச் செல்கிறார். அவரை விமான நிலையத்தில் வீடியோவில் காணலாம். விமானத்தில் ஏறும் போது அவரது தந்தை செல்ஃபி கூட எடுத்துக் கொள்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெங்காயம் பூண்டால் தகராறு! விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை! நடந்தது என்ன?
நாளை பெங்களூரில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை! வெளியான லிஸ்ட்!