வீட்டோடு மாப்பிள்ளையாக வைச்சது ஒரு குத்தமா.? கள்ளக் காதலால் மருமகனும் மாமியாரும் ஓட்டம்.. தனி மரமான மகள்.!

Published : Dec 24, 2021, 09:35 PM IST
வீட்டோடு மாப்பிள்ளையாக வைச்சது ஒரு குத்தமா.? கள்ளக் காதலால் மருமகனும் மாமியாரும் ஓட்டம்.. தனி மரமான மகள்.!

சுருக்கம்

ஒரு பக்கம் மகளுக்கு மட்டுமல்ல, கட்டிய கணவனுக்கும் துரோகம் செய்துவிட்டு கள்ளக் காதலனுடன் சென்றுவிட்டார். இதனால் விரக்தி அடைந்த பிரியங்காவும் அவருடைய தந்தையும் இருவரையும் கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் வீட்டோடு இருந்த மாப்பிள்ளைக்கும் மாமியாருக்கும் ஏற்பட்ட கள்ள உறவால் கணவரும், அவரைய மகளும் தனி மரமாயினர். 

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் ராம்புர்கஹத் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண கோபால் தாஸ். இவருக்கும் பிரியங்கா தாஸ் என்ற பெண்ணுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கிருஷ்ண கோபால் தாஸுக்கும் மனைவி பிரியங்கா தாஸுக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. வாய்த்தகராறு அடிக்கடி முற்றி மனைவியை போட்டு அடிப்பது என கிருஷ்ண கோபால் இருந்துள்ளார். 

தம்பதிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததால், இரு குடும்பத்தாரும் கூடி பஞ்சாயத்து செய்தனர். கிருஷ்ண கோபால் தாஸ், பிரியங்காவை மீது குடும்ப வன்முறையில் ஈடுபடாமல் இருக்க ஒரு முடிவெடுத்தனர். அதன்படி மனைவி பிரியங்கா தாஸ் வீட்டில் கிருஷ்ண கோபால் சில காலம் தங்கி இருக்கும்படி செய்யலாம் என்று முடிவெடுத்தனர். அதை மாப்பிள்ளை கிருஷ்ணகோபாலும் ஒப்புக்கொண்டார். அதன்படி கிருஷ்ண கோபால் வீட்டோடு மாப்பிள்ளையாக மாறினார். நாளாக நாளாக வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தது கிருஷ்ண கோபாலுக்கு பழகிவிட்டது.

ஒரு கட்டத்தில் மனைவி பிரியங்கா சொந்த வீட்டுக்குப் போகலாம் என்று அழைத்தபோதும் மாப்பிள்ளை கிருஷ்ண கோபால் மறுத்துவிட்டார். பிறகுதான் விஷயம் தெரிய வந்தது. கிருஷ்ண கோபால் தாஸுக்கும் மனைவியின் தாயார், அதாவது மாமியார் ஷிபாலி தாஸூடனேயே கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். பிரியங்கா தாஸ் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் நெருக்கமாக பேசி பழகி வந்திருக்கிறார்கள். இந்த நெருக்கம்தான் பின்னர் கள்ளக் காதலாக மாறியிருக்கிறது. இந்த கள்ள உறவு சுமார் 3 ஆண்டுகள் வரை நீண்டதாகத் தெரிகிறது. இருவர் நடத்தையிலும் சந்தேகம் வந்த பிறகுதான் மனைவி பிரியங்கா தாஸ், கள்ளக் காதலைக் கண்டுபிடித்திருக்கிறார். 

இதனால் குடும்பத்தில் அம்மா - மனைவி-கணவன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்துவிட்டது. எனவே பிரியங்கா தாஸின் அம்மா ஷிபானி தாஸ் தன் கள்ளகாதலலான மருமகனுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்று தனியாக குடும்பம் நடத்த தொடங்கிவிட்டார். ஒரு பக்கம் மகளுக்கு மட்டுமல்ல, கட்டிய கணவனுக்கும் துரோகம் செய்துவிட்டு கள்ளக் காதலனுடன் சென்றுவிட்டார். இதனால் விரக்தி அடைந்த பிரியங்காவும் அவருடைய தந்தையும் இருவரையும் கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார்  விசாரித்து வருகின்றனர். மாமியாரே மருமகனோடு வீட்டை விட்டு ஓடி குடும்பம் நடத்தி வருவது முகம் சுளிக்க வைத்திருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

TVK - CONGRESS: திமுக கூட்டணி' டமால்! தளபதி விஜய் ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு! என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?
Digital Ration Token: ரேஷன் வாங்க இனி டோக்கன் அவசியம்..! இனி மணிக்கணக்குல வெயிட் பண்ண வேண்டாம்