சூரிய கிரகணம் மகாளய நாளில் அதாவது அக்டோபர் 14 அன்று நிகழும். 2023ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இதுவாகும்.
2023 ம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் விரைவில் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணமானது விஞ்ஞான ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பொது இந்துக்களின் வழிபாட்டு முறையின் படி கிரகணம் என்பது சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நேரமாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் நிகழ்ந்த நிலையில், இரண்டாவது மற்றும் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமானது புரட்டாசி மாத அமாவாசை அன்று நிகழ உள்ளது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியன் மறைக்கப்படும்.
அதாவது நிலவின் நிழல், பூமியின் மீது விழும். இது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே, சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் 14 ம் தேதி நிகழ உள்ளது. இந்த கிரகணம் 5 நிமிடங்கள் மட்டுமே வானில் தென்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூரிய கிரகணத்தை வடஅமெரிக்கா, கனடா, மெக்சிகோ, அர்ஜெண்டினா, கொலம்பியா, க்யூபா, பெரு, உருகுவே, வெனின்சுலா, ஜமைக்கா, பிரேசில், பராகுவே, பஹாமாஸ், டோமினிகா உள்ளிட்ட நாடுகளில் 5 நிமிடங்கள் மட்டுமே காண முடியும் என சொல்லப்படுகிறது.
அக்டோபர் 14 ம் தேதி இரவு 08.33 மணிக்கு பகுதி நேர சூரிய கிரகணமாக துவங்கி, 09.40 மணிக்கு முழு சூரிய கிரகணமாக மாறும். கிரகணம் உச்சமடையும் நேரமாக இரவு 11.29 மணி சொல்லப்பட்டுள்ளது. முழு சூரிய கிரகணம் அக்டோபர் 15 ம் தேதி அதிகாலை 01.18 மணிக்கே நிறைவடைகிறது. இது நீண்ட சூரியகிரகணமாகவும் பார்க்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!