வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதையடுத்து, 9 மணி நேரத்துக்கு முன்பாகவே, திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை சுமார் 11¼ மணிநேரம் மூடப்படுகிறது.
வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதையடுத்து, 9 மணி நேரத்துக்கு முன்பாகவே, திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை சுமார் 11¼ மணிநேரம் மூடப்படுகிறது.
மேலும் படிக்க:நீட் தேர்வு முடிவுகள்.. தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட் ஆஃப் குறித்து வெளியான முக்கிய தகவல்
இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் செய்தியில், ''சூரிய கிரகணம் ஏற்படுவதால், பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. அன்று இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர்.
அதேபோல் நவம்பர் மாதம் 8ஆம் தேதி மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. எனவே நவம்பர் மாதம் 8ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை சுமார் 10 மணிநேரம் மூடப்படுகிறது.
மேலும் படிக்க:உஷார் !! திடீரென்று மின் கசிவு.. சார்ஜ் போடும் போது லேப்டாப் வெடித்து சிதறி தீ விபத்து.. வீடு எரிந்து நாசம்
இதனால், அன்று கோவிலில் பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
அன்று இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவர். இதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.