பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்திய பாகிஸ்தான்.! 26 நிலைகள் மீது தாக்க முயற்சி- சோபியா குரேஷி

Published : May 09, 2025, 05:58 PM ISTUpdated : May 09, 2025, 06:13 PM IST
பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்திய பாகிஸ்தான்.! 26 நிலைகள் மீது தாக்க முயற்சி- சோபியா குரேஷி

சுருக்கம்

இந்தியாவின் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றதாகவும், துருக்கியிடம் இருந்து வாங்கிய ட்ரோன்களை பயன்படுத்தியதாகவும் கர்ணல் சோபியா குரேஷி தெரிவித்தார்.

இந்தியா பாகிஸ்தான் பதற்றம் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு அடுத்தடுத்து கடும் நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானில் உள்ள 9 நிலைகளை குறிவைத்து தாக்கியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதலில் ஈடுபட்டது. இதன் காரணமாக நேற்று இரவு பதற்றமான நிலை நீடித்து வருகிறது. 

துருக்கியிடம் இருந்து வாங்கிய ட்ரோன்களை பயன்படுத்திய பாகிஸ்தான்

இது தொடர்பாக கர்னல் சோபியா குரேஷி  இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். இந்தியாவின் 26 நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றது . வியாழக்கிழமை இரவு நமது ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை திறமையாக சுட்டு வீழ்த்தியதாகவும் கர்னல் சோபியா குரேஷி தெரிவித்தார். இந்த ட்ரோன்கள் துருக்கியைச் சேர்ந்தவை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறினார். எல்லை கட்டுப்பாட்டுபகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. இந்தியாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் போயிங் விமானத்தை கேடயமாக பயன்படுத்தியது.

பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்திய பாகிஸ்தான்

இந்த தாக்குதலுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் தனது வான் எல்லையை மூடவில்லை. இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றது. உர், பூஜ் , உதம்பூர் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயன்றது. இவை அனைத்தும் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்தார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக விங் கமாண்டர் வ்யோமிகா சிங் தெரிவித்தார்.

வழிபாட்டு தலங்களை குறிவைத்த பாகிஸ்தான்

இதனை தொடர்ந்து பேசிய ந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தான் தனது இழிவான மனநிலையைக் காட்டியுள்ளதாக தெரிவித்தார். கோயில்கள், குருத்வாராக்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறினார். இதைவிட இழிவானது வேறு எதுவும் இருக்க முடியுமா என்று மிஸ்ரி கேள்வி எழுப்பினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ விமானம் ரத்து.. திருமண வரவேற்பில் வீடியோ மூலம் கலந்துகொண்ட புதுமணத் தம்பதி!
பீகார் SIR பணியில் தில்லுமுல்லு.. நீக்கப்படாத 5 லட்சம் போலி வாக்காளர்கள்!