
இந்தியாவின் விருந்தோம்பல் துறையில் முக்கிய நிறுவனமாக ஓயோ விளங்குகிறது. தற்போது பிரபலமான ஹிந்தி செய்தித்தாளில் வெளியான விளம்பரம் மத உணர்வுகளை புண்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஓயோவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் ‘Boycott Oyo’ என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஹிந்தி செய்தித்தாளில் வெளியான ஓயோவின் விளம்பரத்தில், ‘கடவுள் எங்கும் இருக்கிறார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த வரியில், ‘அதேபோல் ஓயோவும் எங்கும் இருக்கிறது’ என்று இருந்தது.
கடவுளுடன் ஓயோவை ஒப்பிட்டு விளம்பரம் செய்ததை பல மத குழுக்கள் ஏற்கவில்லை. விளம்பரத்தில் கடவுளை அவமதித்ததாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் ஓயோ விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மன்னிப்பு கேட்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என பல குழுக்கள் எச்சரித்துள்ளன. சமூக ஊடகங்களில் ‘ஓயோவை புறக்கணி’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இதற்கிடையில், ஓயோவின் லோகோ குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் ரித்தேஷ் அகர்வால் முன்பு கூறிய கருத்து சர்ச்சையை மேலும் தூண்டியுள்ளது. ஒரு நேர்காணலில், ஜெகந்நாதரின் கண் மற்றும் மூக்கிலிருந்து தான் ஓயோ லோகோவை உருவாக்கியதாக ரித்தேஷ் கூறியிருந்தார்.
அந்த கருத்தும் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. வணிக நிறுவனம் இதுபோன்ற புனித சின்னத்தை பயன்படுத்துவது சரியா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். இருப்பினும், இதுகுறித்து ஓயோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஓயோ ரூம்ஸ் அதிகம் முன்பதிவு செய்யப்படும் நகரம் எது.? தமிழ்நாடும் லிஸ்டில் இருக்கா.?