300 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் … பத்திரமாக மீட்பு !! தொடரும் அவலம் !!

By Selvanayagam PFirst Published Nov 14, 2019, 9:31 PM IST
Highlights

மகாராஷ்ட்ராவில்  300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
 

அண்மைக்காலமாக  ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிறுவர்கள் தவறி விழுவது சகஜமாகி வருகிறது. கடந்த மாதல் திருச்சியை அடுத்த மணப்பாறையில் சிறுவன் சுஜித் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்ற கிராமத்தில், 300 அடி  ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் இன்று காலை தவறி விழுந்தான். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் உடனடியாக சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவனை தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

தற்போது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

click me!