கேரளாவில் மீண்டும் பதற்றம்... சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் 36 பெண்கள் முன்பதிவு..!

Published : Nov 14, 2019, 05:49 PM ISTUpdated : Nov 20, 2019, 01:34 PM IST
கேரளாவில் மீண்டும் பதற்றம்... சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் 36 பெண்கள் முன்பதிவு..!

சுருக்கம்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற நிலை தொடரும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதையடுத்து ஐயப்பன் கோவிலில் தரிசிக்க ஆன்லைன் மூலம் 36 பெண்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற நிலை தொடரும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதையடுத்து ஐயப்பன் கோவிலில் தரிசிக்க ஆன்லைன் மூலம் 36 பெண்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் பிரசித்திபெற்ற ஆன்மீக தலமாக திகழ்ந்து வருகிறது. சபரிமலை கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை செயல்படுத்த மாநில அரசு முயன்றது. ஆனால், பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்தாண்டு மண்டல கால பூஜையின் போது, சபரிமலைக்கு செல்வதற்கு பல பெண்கள் முயன்றனர். ஆனால், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த பிரச்சனையால், பல இடங்களில் வன்முறையும் நடைபெற்றது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, பல்வேறு தரப்பினர், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மொத்தம், 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கை, 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று பரிந்துரை செய்தது. அதே சமயம், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற நடைமுறை அப்படியே இருக்கும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. 

இதனிடையே, சபரிமலையில் 2 மாத காலம் நடைபெறும் மகரஜோதி மண்டல பூஜையானது வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. இந்நிலையில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் மூலம் 36 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் எப்படி தரிசனத்தை மேற்கொள்வார்கள், இவர்களது பாதுகாப்பை மாநில காவல்துறை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதனால், கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!