தி.க. மேடையில் செருப்பு வீச்சு! 20 பேர் கைது

First Published Mar 19, 2018, 1:10 PM IST
Highlights
slipper thrown on the meeting of dravidar kazhagam in puducherry


திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் செருப்பு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் மற்றும் திராவிட கழகத்தைச் சேர்ந்த 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திராவிடர் கழகம் சார்பில் மணியம்மையா நினைவு தின பொதுக்கூட்டம் புதுச்சேரி, வில்லியனூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக வீரமர்த்தினி, அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கடவுள் மறுப்பு பற்றி பேசப்பட்டது., அட்பபோது, கூட்டத்தில் இருந்து மேடையை நோக்கி செருப்பு ஒன்று வீசப்பட்டது. தொடர்ந்து அங்கு திரண்ட பாஜகவினர், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

திராவிடர் கழகத்தினருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். 

திடீரென, அவர்களுக்குள் அடிதடி ஏற்பட்டது. இதனால் அங்கு கலவரம் ஏற்படும் சூழல் உருவானது. இதனை அடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அதனைத் தொடர்ந்து இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், பாஜகவைச் சேர்ந்த வில்லியனூர் மாவட்ட தலைவர் மோகன் குமார், பால பாஸ்கரன், அகிலன் உள்ளிட்ட 13 பேர் மீதும், திராவிட கழகத்தைச் சேர்ந்த சிவ.வீரமணி, ராஜூ, சடகோபன் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

click me!