புல்லட் ரெயில் இருக்கட்டும்....  பாதுகாப்பையும், சுத்தத்தையும் ஜப்பானிடம் கற்றுக்கொள்ளுங்கள்.... கிண்டலடிக்கும்  சிவசேனா!

First Published Sep 15, 2017, 4:03 PM IST
Highlights
Sivasena Party trolled BJP


அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதைக் குறித்து கேள்வி எழுப்பியுள்ள சிவசேனா கட்சி, “ ரெயில்கள் அடிக்கடி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி வரும் நிலையில், ஜப்பான் நாட்டிடம் இருந்து பாதுகாப்பாக ரெயில்கள் இயக்குவது எப்படி என்றும், சுத்தமாக எப்படி  பராமரிக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று அந்த கட்சி கிண்டல் செய்துள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்-மும்பை நகரங்களுக்கு இடையே புல்லட் ரெயில் இயக்கும் திட்டத்தை  பிரதமர் மோடியும், ஜப்பான் அதிபர் ஷின்ஷோ அபேயும் நேற்றுமுன்தின் தொடங்கி வைத்தனர். ஜப்பான் நாட்டு கடனுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த புல்லட்ரெயில் 500 கி.மீ அதிகமான தொலைவை மணிக்கு 350 கி.மீ வேகத்தில் 3 மணிநேரத்துக்குள் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில்  புல்லட்ரெயில் குறித்து தலையங்கத்தில் கடும் விமர்சன செய்து, கவலையும் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

கடந்த சில மாதங்களாக நாட்டில் ரெயில் தடம்புரண்டு பல விபத்துக்கள் நடந்து வரும் நிலையில், புல்லட் ரெயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. இந்தியரெயில்வேயின் மெத்தனப்போக்கால் விபத்துக்கள் நடக்கிறது என்பது மிகுந்த வெட்கக்கேடு, அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஒருநாள் கூட ரெயில்கள் தடம்புரளாமல் இருந்ததில்லை. இதைப் பார்க்கும்போது, ரெயில்களுக்கு இடையே தடம் புரள்வதில் போட்டி இருப்பதுபோல் தெரிகிறது?

மிகவும் புகழ்பெற்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் கூட தடம்புரளும் விபத்தில் இருந்து தப்பவில்லை. நாட்டின் தலைநகர் டெல்லி அருகே ராஜ்தானி ரெயில் தடம் புரண்டது. நாட்டின் மிகவும் பாதுகாப்பான ரெயில் எனக் கருதப்படும் ராஜ்தானி தடம்புரள்வது மிகவும் தீவிரமானதாகும்.

கடந்த 1964ம் ஆண்டில் இருந்து ஜப்பான் நாடு புல்லட் ரெயிலை மணிக்கு 500 முதல் 600 கி.மீ வேகத்தில் இயக்குகிறது. வேகம் என்பது முக்கியமல்ல, இந்த அளவுக்கு வேகத்தில் சென்றாலும் அந்த ரெயில் எந்தவிதத்திலும் தடம்புரளவில்லை என்பது முக்கியமானது.

ஜப்பானின் புல்லட் ரெயிலை வெறும் 7 நிமிடங்களில் சுத்தம் செய்துவிடமுடியும். ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் அது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்படும். ஜப்பான் நாட்டோடு ஒப்பிடும்போது, நம்நாட்டில் ரெயில்கள் தவழ்ந்து வருகிறது, சில ரெயில்கள் தடம்புரள்கிறது, நம்பகத்தின்மையே இல்லை.

100 சதவீதம் ரெயில் பாதுகாப்பை ஜப்பான் நாட்டிடம் இருந்து ஏன் நாம் கற்றுக்கொள்ளக்கூடாது?. பாதுகாப்பான பயணம், சுத்தமாக ரெயில்களை பராமரிப்பது குறித்து ஏன் நாம் கற்றுக்கொள்ளக்கூடாது?. ஜப்பான் நாட்டிடம் இருந்து பாதுகாப்பாகரெயில்களை இயக்குவது, பயணிப்பது குறித்து இந்திய ரெயில்வே கற்றுக்கொண்டால், இந்த தேசம் மகிழ்ச்சி அடையும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!