சிக்கிம் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமான ராணுவ வீரர்கள் 23 பேரில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்
வடகிழக்கு மாநிலமான சிக்கிம்மில் உள்ள லாச்சென் பள்ளத்தாக்கில் இன்று காலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில், சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ராணுவ வீரர்கள் 23 உள்பட மொத்தம் 49 பேர் மாயமாகினர்.
“சிக்கிம் மாநிலத்தின் லான்சன் பள்ளத்தாக்கில் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ராணுவ வாகனங்கள் மூழ்கின. 23 ராணுவ வீரர்கள் மாயமான நிலையில். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.” என்று கவுகாத்தி ராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
undefined
இந்த நிலையில், மாயமான ராணுவ வீரர்கள் 23 பேரில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எஞ்சிய வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை பட்டாசு விபத்து: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!
முன்னதாக, சிக்கிம் முழுவதும் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர் பிரேம் சிங் தமங் பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
மேகவெடிப்பினால் ஏற்பட்ட பலத்த மழையால் சுங் தாங் அணைக்கு திடீரென்று நீர்வரத்து அதிகமானது. இதனால், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. சுமார் 15 முதல் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் வெளியேறியது. இதனால் டீஸ்டா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓட தொடங்கியது. நேரம் செல்ல செல்ல ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளம் ராணுவ முகாமுக்குளும் புகுந்தது. ராணுவ வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.