இந்தியக் குழந்தைகள்.. 13 வயதிலேயே ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர் - எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்!

By Ansgar R  |  First Published Sep 29, 2023, 6:44 PM IST

ஆபாச தளங்களைத் தடுப்பதற்கான முயற்சிகள் அமலில் இருக்கும்போதிலும், இந்தியாவில் குழந்தைகள் 13 வயதிலிருந்தே ஆபாசமான விஷயங்களை குறித்து பார்க்க துவங்குகின்றனர் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


இப்படி இளம் வயதிலேயே ஆபாச விஷயங்களுக்கு ஆளானால், அவர்க்ளின் உடலில் டோபமைன் உற்பத்தி அதிகரித்து, அதன் மூலம் மூளையின் செயல்பாட்டை சீர்குலைக்க வழிவகுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

இந்தியாவில், குழந்தைகள் இளம் வயதிலேயே அதிக அளவில் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்கள், குறிப்பாக 13 வயதில் இருந்தே அது துவங்குகிறது என்று கூறப்படுகிறது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஆபாச தளங்களை பார்க்க தடை அமலில் இருக்கும்போதும், தொடர்ந்து அந்த தளங்களை பார்க்கும் இளம் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Latest Videos

undefined

மகளை 7 மாதம் கர்ப்பமாக்கிய தந்தை.. உடந்தையாக இருந்த தாய்.. சிக்கிய மெடிக்கல் ஷாப் ஓனர்.!

குழந்தைகளின் குடும்ப வாழ்க்கை மீதான தாக்கம்

தங்கள் பெற்றோருடன் இணைந்து வாழ சிரமப்படும் குழந்தைகள் அல்லது தங்கள் பெற்றோருடன் நெருக்கமாக பழக பயப்படும் குழந்தைகள் ஆபாசத்திற்கு அடிமையாவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். கூடுதலாக, மோசமான தரமான குடும்பச் சூழல்கள் குழந்தைகளை ஆபாச போதைக்கு அழைத்துச் செல்வதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. 

பெங்களூரைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன், பிரிந்துபோன தனது குடும்ப சூழலின் தாக்கத்தில் இருந்து வெளியே வர ஆபாச தளங்களை நாடியுள்ளான். 7 வயது சிறுவனின் இந்த விபரீத மாற்றத்திற்கு முழுக்க முழுக்க அந்த குடும்பத்தின் மீதான வெறுப்பே காரணம் என்றும் மும்பை பல்கலைக்கழக மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். 

இன்பம் தேடும் நடத்தையினால் ஏற்படும் விளைவு: 

மருத்துவ உளவியல் தொடர்பான தேசிய மாநாட்டில் ஒரு குழு விவாதத்தின் போது நிபுணர்கள் மூளையில் ஆபாசத்தின் பாதகமான விளைவுகளைப் பற்றி விவாதித்தனர். SHUT கிளினிக்கின் மருத்துவ உளவியலின் கூடுதல் பேராசிரியரும், ஆலோசகருமான டாக்டர் நிதின் ஆனந்த், மூளையின் டோபமைன் அளவு அமைப்பில் ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்தார்.

இளம் பருவத்தினர் ஆபாசத்தை அதிகமாக பார்ப்பதால் மூளையின் இன்ப மையத்தை அது எவ்வாறு சீர்குலைத்து, செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்பதை அவர் விளக்கியுள்ளார். உயர்ந்த டோபமைன் உற்பத்தியானது, உயர்-விழிப்புணர்வு அனுபவங்களிலிருந்து மட்டுமே மகிழ்ச்சியைப் பெறுவதற்கு காரணமாகிறது என்றார்.

என்ன செய்யலாம்

குழந்தைகள் மத்தியில் ஆபாச நுகர்வு பற்றிய பரவலான பிரச்சினை, விரிவான பாலியல் கல்வி மற்றும் இணைய அணுகல் இல்லாததால் ஏற்படுகிறது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். வளர்ந்து வரும் இந்த கவலையை சமாளிக்க பள்ளி பாடத்திட்டங்களில் பாலியல் கல்வி சேர்க்கப்பட வேண்டிய அவசரத் தேவையையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

 ஆபாசத்தை அதிகம் பார்க்கும் ஒரு கூட்டாளரைக் கொண்டிருப்பது அவர்களுடைய நீண்ட கால உறவுகளை சீர்குலைத்து, நெருக்கம் சம்மந்தமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே இளம் வயதில் குழந்தைகள் இந்த தவறான வழியில் செல்லாமல் இருக்க, அவர்கள் மீது பெற்றோர்கள் மிகுந்த அக்கறையோடு செயல்பட வேண்டும் என்று அறிஞர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நான் கடவுள் சினிமா பாணியில் கிரிவலப் பாதையில் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட சிறுவர்கள்; அதிகாரிகள் அதிரடி

click me!