மருமகளுக்கு வைர நெக்லஸ்.. பரிசளித்த நீதா அம்பானி.. தலை சுற்றவைக்கும் விலை - ஒரு பெரிய பட்ஜெட் படமே எடுக்கலாம்!

By Ansgar R  |  First Published Sep 29, 2023, 5:38 PM IST

Shloka Mehta Diamond Necklace : முகேஷ் அம்பானி, இவரை பற்றி கேள்விப்படாத மனிதர்கள் இந்தியாவிலேயே இல்லை என்றாலும் அது மிகையல்ல. இந்தியாவில் பணக்கார நபர் என்ற அந்தஸ்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 9140 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். அவருடைய சொத்து மதிப்பு எப்படி நம்மை வாய் பிளக்க வைக்கின்றதோ, அதே போல இவர் வீட்டில் நடக்கும் சில சுப செலவுகளுக்கும் நம் தலைகளை சுற்றவைக்கின்றது.


முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தார் ஒவ்வொரு நிமிடமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் வாங்கும் சில பொருட்களுக்கும் நம் மனதைக் கவரும் என்றால் அது மிகையல்ல. ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் திருமண அழைப்பிதழ்களில் விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா?

அதேபோல் கடந்த 2019 இல், முகேஷ் அம்பானி ஹேம்லிஸ் நிறுவனத்தை வாங்கினார் அதற்கு ரொக்கமாக ரூ.620 கோடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதா அம்பானியின் ஹெர்ம்ஸ் பிராண்ட் பை மிகவும் விலை உயர்ந்தது, அந்த பை வாங்கிய பணத்தில் நம்மால், அனைத்து வசதிகள் கொண்ட ஒரு வீட்டையே வாங்கமுடியும். இவர்களது மகள் இஷா அம்பானியின் இரட்டைக் குழந்தைகள் மும்பைக்கு அழைத்துவரப்பட்டபொது, சுமார் 300 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தனர் அந்த குடும்பத்தினர்.

Latest Videos

undefined

கர்நாடகா பந்த்.! திரையுலகினர் போராட்டம்.! சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட நடிகர் ஷிவ்ராஜ்குமார்

இதுவரை நாம் கேட்டதே நம்ம தலைகளை சுற்றவைத்த நிலையில், இப்பொது அடுத்து வரும் செய்தி தான் நம்மை வாய்பிளக்க வைக்கப்போகிறது. முகேஷ் அம்பானியின் மனைவி, நீதா அம்பானி தனது மூத்த மருமகளுக்கு ஒரு வைர நெக்லஸ் ஒன்றை திருமணநாள் பரிசாக கொடுத்துள்ளார். 

NYC ரத்தின மொத்த விற்பனையாளரான Julia Hackman Chafé அளித்த தகவலின்படி, நீதா அம்பானி, தனது மருமகள் ஷ்லோகாவிற்கு உலகப் புகழ்பெற்ற L'Incomparable necklace ஐ பரிசாக அளித்துள்ளார். இது உலகின் மிகப்பெரிய குறைபாடற்ற வைரம் இதன் விலை சுமார் ரூ. 450 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது ரோஸ் கோல்ட் சங்கிலியில் அமைக்கப்பட்ட 407-ஸ்டேப் கட் மஞ்சள் வைரம் மற்றும் 91 மற்ற வைரங்களால் (கூடுதல் 200 காரட்கள்) அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன் வெட்டு மற்றும் வடிவமைப்பை நகலெடுக்கவோ அல்லது ரீமேக் செய்யவோ முடியாது என்பதால், இந்த நெக்லஸ் வரலாற்றில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

லெபனான் நாட்டு நகை வியாபாரி மௌவாட் என்பவரால் இந்த நெக்லஸ் உருவாக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரலாற்று ரீதியாக, அற்புதமான மஞ்சள் வைரமான இது,1980 களில் ஆப்பிரிக்க காங்கோவில் ஒரு இளம் பெண்ணால் கைவிடப்பட்ட சுரங்க இடிபாடுகளின் குவியலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது முதன்முதலில் 2013 இல் தோஹா ஜூவல்லரி மற்றும் வாட்ச் கண்காட்சியில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாம் எந்த மாநிலமாக இருந்தாலும் சரி.. இதுதான் வழி.. காவிரி பிரச்னைக்கு தீர்வு சொன்ன சத்குரு..!

click me!