Tirumala Tirupati: திருப்பதி போகும் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு..!

Published : Feb 21, 2022, 07:23 AM IST
Tirumala Tirupati: திருப்பதி போகும் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு..!

சுருக்கம்

ஏழுமலையானை வழிபடும் வகையில் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் பின்புறம் உள்ள  கோவிந்தராஜ் சுவாமி சத்திரம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து கடந்த 15ம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.  தினந்தோறும் 10,000 டிக்கெட்டுகள் என வழங்கப்பட்டு வருகிறது. 

திருப்பதியில் வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட்டுகளை  வைத்து ஏழுமலையானை  தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 4  நாட்கள் காத்திருந்து தரிசனம்  செய்ய வேண்டும் என கோவில் தேவஸ்தானம் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆகியவை ஆன்லைன் மூலம் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானை வழிபட ஆன்லைனில் வெளியிடப்படும் டிக்கெட்டுகள் 10 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டுவிடும்.

இதனால் இணையதள சேவையை பயன்படுத்தத் தெரியாதவர்கள், இணையதள வசதி வேகத்தில் குறைவாக இருக்கும் பகுதியினர் ஆன்லைன் டிக்கெட்டுகளை பயன்படுத்திக் கொள்ள முன் பதிவு செய்ய இயலாத நிலை இருந்தது. இதனால் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேர் முதல் 30 ஆயிரம் பேர் வரை மட்டுமே திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறார்கள். ஆன்லைனில் புக் செய்யப்படுவதால் சொந்த ஊர்களில் இருந்து நேராக மேல் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தரிசனத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பி விடுகிறார்கள். இந்நிலையில், ஏழுமலையானை வழிபடும் வகையில் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் பின்புறம் உள்ள  கோவிந்தராஜ் சுவாமி சத்திரம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து கடந்த 15ம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.  தினந்தோறும் 10,000 டிக்கெட்டுகள் என வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகளை பெற்ற  பக்தர்கள்  மறுநாள்  சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம்  அறிவித்தது. 

டிக்கெட் வழங்க தொடங்கியதில் இருந்து இதனை பெறுவதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் தொடர்ந்து திருப்பதிக்கு  வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணாக அடுத்த நாட்களுக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. 20ம் தேதி வழங்கப்பட்ட டிக்கெட்  பெற்ற பக்தர்களுக்கு 24ம் தேதி தான் சுவாமி தரிசனம் செய்வதற்கான  வாய்ப்புகள் கிடைக்கிறது.  எனவே தொடர்ந்து பக்தர்கள்  வருகை இதேபோன்று இருந்து வருவதால் இலவச தரிசன டிக்கெட்டுகள் மூலம் சுவாமி தரிசனத்திற்கு 4 நாட்கள் பக்தர்கள் திருப்பதியில் தங்கியிருந்து சுவாமி தரிசனம்  செய்ய வேண்டி இருக்கும். எனவே  பக்தர்கள் அதற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொண்டு வரவேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

காசி தமிழ் சங்கமம் 4.0: தமிழக விவசாயிகளுக்கு வாரணாசியில் பிரமாண்ட வரவேற்பு
வந்தே மாதரம் சத்தத்தைக் கேட்டு காங்கிரஸ் ஏன் பயந்தது? நாடாளுமன்றத்தில் வரலாற்றை தோலுரித்த மோடி